வாசகங்கள்
17 ஜூன், 2027
Ordinary Weekday
அன்றைய திருப்பலி
First Reading
2 கொரிந்தியர் 11: 1-11
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 111: 1b-2, 3-4, 7-8
1⁽அல்லேலூயா! நெஞ்சார␢ ஆண்டவருக்கு␢ நன்றி செலுத்துவேன்;␢ நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும்␢ அவருக்கு நன்றி செலுத்துவேன்.⁾
2⁽ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை;␢ அவற்றில் இன்பம் காண்போர்␢ அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர்.⁾
3⁽அவரது செயல்␢ மேன்மையும் மாண்பும் மிக்கது;␢ அவரது நீதி என்றென்றும்␢ நிலைத்துள்ளது.⁾
4⁽அவர் தம் வியத்தகு செயல்களை என்றும்␢ நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்;␢ அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர்.⁾
7⁽அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள்␢ நம்பிக்கைக்குரியவை; நீதியானவை;␢ அவர்தம் கட்டளைகள் அனைத்தும்␢ நிலையானவை.⁾
8⁽என்றென்றும் எக்காலமும்␢ அவை நிலைமாறாதவை;␢ உண்மையாலும் நீதியாலும்␢ அவை உருவானவை.⁾
Alleluia
உரோமையர் 8: 15bc
15மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம்.
Gospel
மத்தேயு 6: 7-15
7மேலும், நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
8நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில், நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.
9ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்:⁽‘விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே,␢ உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!⁾
10⁽உமது ஆட்சி வருக!␢ உமது திருவுளம் விண்ணுலகில்␢ நிறைவேறுவதுபோல␢ மண்ணுலகிலும் நிறைவேறுக!⁾
11⁽இன்று தேவையான உணவை*␢ எங்களுக்குத் தாரும்.⁾
12⁽எங்களுக்கு எதிராகக் குற்றம்␢ செய்தோரை நாங்கள்␢ மன்னித்துள்ளதுபோல␢ எங்கள் குற்றங்களை மன்னியும்.⁾
13⁽எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,␢ தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்.␢ [‘ஆட்சியும் வல்லமையும் மாட்சியும்␢ என்றென்றும் உமக்கே. ஆமென்.’]⁾
14மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்.
15மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.