ஜூன் 2027

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
27282930
இன்றுக்கு

வாசகங்கள்

12 ஜூன், 2027

Ordinary Weekday/ Optional Memorial of the Blessed Virgin Mary

Optional Memorial of the Blessed Virgin Mary
First Reading

2 கொரிந்தியர் 5: 14-21

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 103: 1-2, 3-4, 9-10, 11-12

1⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ என் முழு உளமே!␢ அவரது திருப்பெயரை ஏத்திடு!⁾ 2⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ அவருடைய கனிவான செயல்கள்␢ அனைத்தையும் மறவாதே!⁾ 3⁽அவர் உன் குற்றங்களையெல்லாம்␢ மன்னிக்கின்றார்;␢ உன் நோய்களையெல்லாம்␢ குணமாக்குகின்றார்.⁾ 4⁽அவர் உன் உயிரைப்␢ படுகுழியினின்று மீட்கின்றார்;␢ அவர் உனக்குப்␢ பேரன்பையும் இரக்கத்தையும்␢ மணிமுடியாகச் சூட்டுகின்றார்.⁾ 9⁽அவர் எப்பொழுதும்␢ கடிந்து கொள்பவரல்லர்;␢ என்றென்றும் சினங்கொள்பவரல்லர்.⁾ 10⁽அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப␢ நம்மை நடத்துவதில்லை;␢ நம் குற்றங்களுக்கு ஏற்ப␢ நம்மைத் தண்டிப்பதில்லை.⁾ 11⁽அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக்␢ காட்டும் பேரன்பு␢ மண்ணினின்று விண்ணளவு போன்று␢ உயர்ந்தது.⁾ 12⁽மேற்கினின்று கிழக்கு␢ எத்துணைத் தொலைவிலுள்ளதோ,␢ அத்துணைத் தொலைவிற்கு␢ நம் குற்றங்களை நம்மிடமிருந்து␢ அவர் அகற்றுகின்றார்.⁾
Alleluia

திருப்பாடல்கள் 119: 36a, 29b

36⁽உம் ஒழுங்குமுறைகளில் என் இதயம்␢ நாட்டங்கொள்ளச் செய்யும்;␢ தன்னலத்தை நாடவிடாதேயும்.⁾ 29⁽பொய் வழியை␢ என்னைவிட்டு விலக்கியருளும்;␢ உமது திருச்சட்டத்தை␢ எனக்குக் கற்றுத்தாரும்.⁾
Gospel

மத்தேயு 5: 33-37

33“மேலும், ‘பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 34ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால், அது கடவுளின் அரியணை. 35மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில், அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில், அது பேரரசரின் நகரம். 36உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில், உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது. 37ஆகவே, நீங்கள் பேசும்போது ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.