ஜூன் 2027

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
27282930
இன்றுக்கு

வாசகங்கள்

19 ஜூன், 2027

Ordinary Weekday/ Optional Memorial of the Blessed Virgin Mary/ Romuald, Abbot

Romuald, Abbot
First Reading

2 கொரிந்தியர் 12: 1-10

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 34: 8-9, 10-11, 12-13

8⁽ஆண்டவர் எத்துணை இனியவர் என்று␢ சுவைத்துப் பாருங்கள்;␢ அவரிடம் அடைக்கலம் புகுவோர்␢ பேறுபெற்றோர்.⁾ 9⁽ஆண்டவரின் தூயோரே,␢ அவருக்கு அஞ்சுங்கள்;␢ அவருக்கு அஞ்சுவோர்க்கு␢ எக்குறையும் இராது.⁾ 10⁽சிங்கக் குட்டிகள் உணவின்றிப்␢ பட்டினி இருக்க நேரிட்டாலும்,␢ ஆண்டவரை நாடுவோர்க்கு␢ நன்மை ஏதும் குறையாது.⁾ 11⁽வாரீர் பிள்ளைகளே!␢ நான் சொல்வதைக் கேளீர்!␢ ஆண்டவருக்கு அஞ்சுவதைப்பற்றி␢ உங்களுக்குக் கற்பிப்பேன்.⁾ 12⁽வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா?␢ வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு␢ நெடுநாள் வாழ நாட்டமா?⁾ 13⁽அப்படியெனில், தீச்சொல்லினின்று␢ உன் நாவைக் காத்திடு;␢ வஞ்சக மொழியை␢ உன் வாயைவிட்டு விலக்கிடு!⁾
Alleluia

2 கொரிந்தியர் 8: 9

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

மத்தேயு 6: 24-34

24“எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது. 25“ஆகவே, நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? 26வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! 27கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?* 28உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை. 29ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன். 30நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா? 31ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள். 32ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும். 33ஆகவே, அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும்* நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். 34ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில், நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.”