ஜூன் 2027

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
27282930
இன்றுக்கு

வாசகங்கள்

20 ஜூன், 2027

Twelfth Sunday in Ordinary Time

அன்றைய திருப்பலி
First Reading

யோபு 38: 1, 8-11

1⁽ஆண்டவர் சூறாவளியினின்று␢ யோபுக்கு அருளிய பதில்:⁾ 8⁽கருப்பையினின்று கடல்␢ உடைப்பெடுத்து ஓடியபொழுது␢ அதனைக் கதவிட்டு அடைத்தவர் யார்?⁾ 9⁽மேகத்தை அதற்கு மேலாடையாக்கி,␢ காரிருளைப் பொதிதுணியாக்கி,⁾ 10⁽எல்லைகளை நான் அதற்குக் குறித்து␢ கதவையும் தாழ்ப்பாளையும் பொருத்தி⁾ 11⁽‘இதுவரை வருவாய், இதற்குமேல் அல்ல;␢ உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!”␢ என்று நான் இயம்பியபோது எங்கிருந்தாய் நீ?⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 107: 23-24, 25-26, 28-29, 30-31

23⁽சிலர் கப்பலேறிக் கடல்வழிச் சென்றனர்;␢ நீர்த்திரள்மீது வாணிகம் செய்தனர்.⁾ 24⁽அவர்களும்␢ ஆண்டவரின் செயல்களைக் கண்டனர்;␢ ஆழ்கடலில் அவர்தம்␢ வியத்தகு செயல்களைப் பார்த்தனர்.⁾ 25⁽அவர் ஒரு வார்த்தை சொல்ல,␢ புயல் காற்று எழுந்தது;␢ அது கடலின் அலைகளைக்␢ கொந்தளிக்கச் செய்தது.⁾ 26⁽அவர்கள் வானமட்டும்␢ மேலே வீசப்பட்டனர்;␢ பாதாளமட்டும் கீழே தள்ளப்பட்டனர்;␢ அவர்கள் உள்ளமோ␢ இக்கட்டால் நிலைகுலைந்தது.⁾ 28⁽தம் நெருக்கடியில் அவர்கள்␢ ஆண்டவரைக் கூவியழைத்தனர்;␢ அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து␢ அவர் அவர்களை விடுவித்தார்.⁾ 29⁽புயல்காற்றை அவர்␢ பூந்தென்றலாக மாற்றினார்;␢ கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன.⁾ 30⁽அமைதி உண்டானதால்␢ அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்;␢ அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு␢ அவர் அவர்களைக்␢ கொண்டு போய்ச் சேர்த்தார்.⁾ 31⁽ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு,␢ மானிடரான அவர்களுக்கு அவர் செய்த␢ வியத்தகு செயல்களை முன்னிட்டு␢ அவர்கள் அவருக்கு␢ நன்றி செலுத்தவார்களாக!⁾
Second Reading

2 கொரிந்தியர் 5: 14-17

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Alleluia

லூக்கா 7: 16

16அனைவரும் அச்சமுற்று, “நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
Gospel

மாற்கு 4: 35-41

35அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, “அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்” என்றார். 36அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன. 37அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது. 38அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், “போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். 39அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்து கொண்டார். கடலை நோக்கி, “இரையாதே, அமைதியாயிரு” என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று. 40பின் அவர் அவர்களை நோக்கி, “ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டார். 41அவர்கள் பேரச்சம் கொண்டு, “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ!” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.