ஜூன் 2027

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
27282930
இன்றுக்கு

வாசகங்கள்

15 ஜூன், 2027

Ordinary Weekday

அன்றைய திருப்பலி
First Reading

2 கொரிந்தியர் 8: 1-9

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 146: 2, 5-6ab, 6c-7, 8-9a

2⁽நான் உயிரோடு உள்ளளவும்␢ ஆண்டவரைப் போற்றிடுவேன்;␢ என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப்␢ புகழ்ந்து பாடிடுவேன்.⁾ 5⁽யாக்கோபின் இறைவனைத்␢ தம் துணையாகக் கொண்டிருப்போர்␢ பேறுபெற்றோர்;␢ தம் கடவுளாகிய ஆண்டவரையே␢ நம்பியிருப்போர் பேறுபெற்றோர்.⁾ 6⁽அவரே விண்ணையும் மண்ணையும்␢ கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும்␢ உருவாக்கியவர்;␢ என்றென்றும் நம்பிக்கைக்கு␢ உரியவராய் இருப்பவரும் அவரே!⁾ 7⁽ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான␢ நீதியை நிலைநாட்டுகின்றார்;␢ பசித்திருப்போர்க்கு␢ உணவளிக்கின்றார்;␢ சிறைப்பட்டோர்க்கு␢ விடுதலை அளிக்கின்றார்.⁾ 8⁽ஆண்டவர் பார்வையற்றோரின்␢ கண்களைத் திறக்கின்றார்;␢ தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்;␢ நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.⁾ 9⁽ஆண்டவர் அயல் நாட்டினரைப்␢ பாதுகாக்கின்றார்;␢ அனாதைப் பிள்ளைகளையும்␢ கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்;␢ ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக்␢ கவிழ்த்துவிடுகின்றார்.⁾
Alleluia

யோவான் 13: 34

34‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.
Gospel

மத்தேயு 5: 43-48

43“‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக’, ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். 44ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.*”⒫ 45“இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். 46உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? 47நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா? 48ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.”