டிசம்பர் 2027

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

5 டிசம்பர், 2027

Second Sunday of Advent

அன்றைய திருப்பலி
First Reading

பாரூக்கு (எரேமியாவின் மடல்) 5: 1-9

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 126: 1-2, 2-3, 4-5, 6

1⁽சீயோனின் அடிமை நிலையை § ஆண்டவர் மாற்றினபோது,␢ நாம் ஏதோ கனவு § கண்டவர் போல இருந்தோம்.⁾ 2⁽அப்பொழுது, நமது முகத்தில்␢ மகிழ்ச்சி காணப்பட்டது.␢ நாவில் களிப்பாரவாரம் எழுந்தது;␢ ‟ஆண்டவர் அவர்களுக்கு␢ மாபெரும் செயல் புரிந்தார்” என்று␢ பிற இனத்தார் தங்களுக்குள்␢ பேசிக்கொண்டனர்.⁾ 3⁽ஆண்டவர் நமக்கு␢ மாபெரும் செயல் புரிந்துள்ளார்;␢ அதனால் நாம்␢ பெருமகிழ்ச்சியுறுகின்றோம்.⁾ 4⁽ஆண்டவரே!␢ தென்னாட்டின் வறண்ட ஓடையை␢ நீரோடையாக␢ வான்மழை மாற்றுவதுபோல,␢ எங்கள் அடிமை நிலையை␢ மாற்றியருளும்.⁾ 5⁽கண்ணீரோடு விதைப்பவர்கள்␢ அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.⁾ 6⁽விதை எடுத்துச் செல்லும்போது –␢ செல்லும்போது – அழுகையோடு␢ செல்கின்றார்கள்;␢ அரிகளைச் சுமந்து வரும்போது –␢ வரும்போது – ␢ அக்களிப்போடு வருவார்கள்.⁾
Second Reading

பிலிப்பியர் 1: 4-6, 8-11

4உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு மன்றாடிவருகிறேன். 5ஏனெனில், தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள். 6உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்வார் என உறுதியாய் நம்புகிறேன். 8கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே பரிவுள்ளத்தோடு உங்கள்மீது எத்துணை ஏக்கமாயிருக்கிறேன் என்பதற்குக் கடவுளே சாட்சி.⒫ 9❮9-11❯மேலும், நீங்கள் அறிவிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுகிறேன். கடவுளின் மாட்சிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நீதியின் செயல்களால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்துவர வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறேன். 10Same as above 11Same as above
Alleluia

லூக்கா 3: 4, 6

4இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: ⁽“பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: § ‘ஆண்டவருக்காக வழியை␢ ஆயத்தமாக்குங்கள்;␢ அவருக்காக பாதையைச்␢ செம்மையாக்குங்கள்;⁾ 6⁽மனிதர் அனைவரும் கடவுள் அருளும்␢ மீட்பைக் காண்பர்’.”⁾⒫
Gospel

லூக்கா 3: 1-6

1திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர். 2அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர். அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார். 3“பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்” என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றிவந்தார். 4இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: ⁽“பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: § ‘ஆண்டவருக்காக வழியை␢ ஆயத்தமாக்குங்கள்;␢ அவருக்காக பாதையைச்␢ செம்மையாக்குங்கள்;⁾ 5⁽பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்;␢ மலை, குன்றுயாவும் தாழ்த்தப்படும்;␢ கோணலானவை நேராக்கப்படும்;␢ கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.⁾ 6⁽மனிதர் அனைவரும் கடவுள் அருளும்␢ மீட்பைக் காண்பர்’.”⁾⒫