டிசம்பர் 2027

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

15 டிசம்பர், 2027

Advent Weekday

அன்றைய திருப்பலி
First Reading

எசாயா 45: 6c-8, 18, 21c-25

6⁽கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி␢ மறையும் திசை வரை␢ என்னையன்றி␢ வேறு எவரும் இல்லை என்று␢ மக்கள் அறியும்படி␢ இதைச் செய்கிறேன்;␢ நானே ஆண்டவர்;␢ வேறு எவரும் இல்லை.⁾ 7⁽நான் ஒளியை உண்டாக்குகிறேன்;␢ இருளைப் படைக்கிறேன்;␢ நல் வாழ்வை அமைப்பவன் நான்;␢ தீமையைப் படைப்பவனும் நானே;␢ இவை அனைத்தையும் செய்யும்␢ ஆண்டவர் நானே.⁾ 8⁽வானங்கள், பனிமழையென␢ வெற்றியை அனுப்பட்டும்;␢ மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும்;␢ மண்ணுலகம் வாய்திறந்து␢ விடுதலைக்கனி வழங்கட்டும்,␢ அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும்;␢ இவற்றைச் செய்பவர் ஆண்டவராகிய நானே.⁾ 18⁽ஏனெனில் விண்ணுலகைப் படைத்த␢ ஆண்டவர் கூறுவது இதுவே:␢ அவரே கடவுள்;␢ மண்ணுலகைப் படைத்து␢ உருவாக்கியவர் அவரே;␢ அதை நிலைநிறுத்துபவரும் அவரே;␢ வெறுமையாய் இருக்குமாறு படைக்காது,␢ மக்கள் வாழுமாறு அதை உருவாக்கினார்.␢ நானே ஆண்டவர்,␢ என்னையன்றி வேறு எவரும் இல்லை.⁾ 21⁽அறிவியுங்கள்; உங்கள் வழக்கை␢ எடுத்துரையுங்கள்;␢ ஒன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள்;␢ தொடக்கத்திலிருந்து␢ இதை வெளிப்படுத்தியவர் யார்?␢ முதன் முதலில்␢ இதை அறிவித்தவர் யார்?␢ ஆண்டவராகிய நான் அல்லவா?␢ என்னையன்றிக் கடவுள்␢ வேறு எவரும் இல்லை;␢ நீதியுள்ளவரும்␢ மீட்பு அளிப்பவருமான இறைவன்␢ என்னையன்றி வேறு எவரும் இல்லை.⁾ 22⁽மண்ணுலகின் அனைத்து␢ எல்லை நாட்டோரே!␢ என்னிடம் திரும்பி வாருங்கள்;␢ விடுதலை பெறுங்கள்;␢ ஏனெனில் நானே இறைவன்;␢ என்னையன்றி வேறு எவருமில்லை.⁾ 23⁽நான் என்மேல் ஆணையிட்டுள்ளேன்;␢ என் வாயினின்று நீதிநிறை வாக்கு␢ புறப்பட்டுச் சென்றது;␢ அது வீணாகத் திரும்பி வராது;␢ முழங்கால் அனைத்தும்␢ எனக்குமுன் மண்டியிடும்;␢ நா அனைத்தும்␢ என்மேல் ஆணையிடும்.⁾ 24⁽‘ஆண்டவரில் மட்டும் எனக்கு␢ நீதியும் ஆற்றலும் உண்டு’ என்று␢ ஒவ்வொருவனும் சொல்லி␢ அவரிடம் வருவான்;␢ அவருக்கு எதிராகச் சீறி எழுந்தவர்␢ அனைவரும் வெட்கக்கேடு அடைவர்.⁾ 25⁽இஸ்ரயேலின் வழி மரபினர் அனைவரும்␢ ஆண்டவரால்␢ ஏற்புடையோராகப் பெற்று␢ அவரைப் போற்றுவர்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 85: 9ab and 10, 11-12, 13-14

9⁽அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு␢ அவரது மீட்பு அண்மையில் உள்ளது␢ என்பது உறுதி; நம் நாட்டில்␢ அவரது மாட்சி குடிகொள்ளும்.⁾ 10⁽பேரன்பும் உண்மையும்␢ ஒன்றையொன்று சந்திக்கும்;␢ நீதியும் நிறைவாழ்வும்␢ ஒன்றையொன்று முத்தமிடும்.⁾ 11⁽மண்ணினின்று உண்மை முளைத்தெழும்;␢ விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.⁾ 12⁽நல்லதையே ஆண்டவர் அருள்வார்;␢ நல்விளைவை நம்நாடு நல்கும்.⁾ 13⁽நீதி அவர்முன் செல்லும்;␢ அவர்தம் அடிச்சுவடுகளுக்கு␢ வழி வகுக்கும்.⁾
Alleluia

எசாயா 40: 9-10

9⁽சீயோனே! நற்செய்தி தருபவளே,␢ உயர்மலைமேல் நின்றுகொள்!␢ எருசலேமே! நற்செய்தி உரைப்பவரே!␢ உன் குரலை எழுப்பு, அஞ்சாதே!␢ ‘இதோ உன் கடவுள்’ என்று␢ யூதா நகர்களிடம் முழங்கு!⁾ 10⁽இதோ என் தலைவராகிய ஆண்டவர்␢ ஆற்றலுடன் வருகின்றார்;␢ அவர் ஆற்றலோடு␢ ஆட்சி புரிய இருக்கிறார்.␢ அவர்தம் வெற்றிப் பரிசைத்␢ தம்முடன் எடுத்து வருகின்றார்;␢ அவர் வென்றவை␢ அவர்முன் செல்கின்றன.⁾
Gospel

லூக்கா 7: 18b-23

18யோவானுடைய சீடர் இவற்றையெல்லாம் அவருக்கு அறிவித்தனர். யோவான் தம் சீடருள் இருவரை வரவழைத்து, 19“வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர் பார்க்க வேண்டுமா?” எனக் கேட்க ஆண்டவரிடம் அனுப்பினார். 20அவர்கள் அவரிடம் வந்து, “‘வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?’ எனக் கேட்கத் திருமுழுக்கு யோவான் எங்களை உம்மிடம் அனுப்பினார்” என்று சொன்னார்கள்.⒫ 21அந்நேரத்தில் பிணிகளையும் நோய்களையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரை இயேசு குணமாக்கினார்; பார்வையற்ற பலருக்குப் பார்வை அருளினார். 22அதற்கு அவர் மறுமொழியாக, “நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்; பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது. 23என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறு பெற்றோர்” என்றார்.⒫