வாசகங்கள்
16 டிசம்பர், 2027
Advent Weekday
அன்றைய திருப்பலி
First Reading
எசாயா 54: 1-10
1⁽பிள்ளை பெறாத மலடியே,␢ மகிழ்ந்து பாடு;␢ பேறுகால வேதனை அறியாதவளே,␢ அக்களித்துப் பாடி முழங்கு;␢ ஏனெனில், கைவிடப்பட்டவளின்␢ பிள்ளைகள்␢ கணவனோடு வாழ்பவளின்␢ பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள்,␢ என்கிறார் ஆண்டவர்.⁾
2⁽உன் கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு;␢ உன் குடியிருப்புகளின்␢ தொங்கு திரைகளைப் பரப்பிவிடு;␢ உன் கயிறுகளைத்␢ தாராளமாய் நீட்டி விடு;␢ உன் முளைகளை உறுதிப்படுத்து.⁾
3⁽வலப்புறமும் இடப்புறமும்␢ நீ விரிந்து பரவுவாய்;␢ உன் வழிமரபினர் வேற்றுநாடுகளை␢ உடைமையாக்கிக் கொள்வர்;␢ பாழடைந்து கிடக்கும் நகர்களிலும்␢ அவர்கள் குடியேற்றப்படுவர்.⁾
4⁽அஞ்சாதே,␢ நீ அவமானத்திற்குள்ளாகமாட்டாய்;␢ வெட்கி நாணாதே,␢ இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய்;␢ உன் இளமையின் மானக்கேட்டை␢ நீ மறந்துவிடுவாய்;␢ உன் கைம்மையின் இழிநிலையை␢ இனி நினைக்கமாட்டாய்.⁾
5⁽ஏனெனில், உன்னை உருவாக்கியவரே␢ உன் கணவர்,␢ ‘படைகளின் ஆண்டவர்’ என்பது␢ அவர்தம் பெயராம்.␢ இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்;␢ ‘உலக முழுமைக்கும் கடவுள்’ என␢ அவர் அழைக்கப்படுகின்றார்.⁾
6⁽ஏனெனில், கைவிடப்பட்டு␢ மனமுடைந்துபோன துணைவிபோலும்,␢ தள்ளப்பட்ட இளம் மனைவி போலும்␢ இருக்கும் உன்னை␢ ஆண்டவர் அழைத்துள்ளார்,␢ என்கிறார் உன் கடவுள்.⁾
7⁽நொடிப்பொழுதே␢ நான் உன்னைக் கைவிட்டேன்;␢ ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை␢ மீண்டும் ஏற்றுக்கொள்வேன்.⁾
8⁽பொங்கியெழும் சீற்றத்தால்␢ இமைப்பொழுதே என்முகத்தை␢ உனக்கு மறைத்தேன்;␢ ஆயினும் என்றுமுள பேரன்பால்␢ உனக்கு இரக்கம் காட்டுவேன்,␢ என்கிறார் ஆண்டவர்.⁾
9⁽எனக்கு இது நோவாவின் நாள்களில்␢ நடந்ததுபோல் உள்ளது;␢ நோவாவின் காலத்துப் பெருவெள்ளம்␢ இனி மண்ணுலகின்மேல்␢ பாய்ந்து வராது என்று␢ நான் ஆணையிட்டேன்;␢ அவ்வாறே உம்மீதும்␢ சீற்றம் அடையமாட்டேன் என்றும்,␢ உன்னைக் கண்டிக்க மாட்டேன் என்றும்␢ ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.⁾
10⁽மலைகள் நிலை சாயினும்␢ குன்றுகள் இடம் பெயரினும்␢ உன்மீது நான் கொண்ட பேரன்போ␢ நிலை சாயாது;␢ என் சமாதான உடன்படிக்கையோ␢ அசைவுறாது, என்கிறார்␢ உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 30: 2 and 4, 5-6, 11-12a and 13b
2⁽என் கடவுளாகிய ஆண்டவரே,␢ உம்மிடம் உதவி வேண்டினேன்;␢ என்னை நீர் குணப்படுத்துவீர்.⁾
4⁽இறையன்பரே, ஆண்டவரைப்␢ புகழ்ந்து பாடுங்கள்;␢ தூயவராம் அவரை நினைந்து␢ நன்றி கூறுங்கள்.⁾
5⁽அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான்␢ இருக்கும்; அவரது கருணையோ␢ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்;␢ மாலையில் அழுகை;␢ காலையிலோ ஆர்ப்பரிப்பு.⁾
6⁽நான் வளமுடன் வாழ்ந்தபோது,␢ ‛என்னை ஒருபோதும்␢ அசைக்க முடியாது’ என்றேன்.⁾
11⁽நீர் என் புலம்பலைக்␢ களிநடனமாக மாற்றிவிட்டீர்;␢ என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு␢ எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்.⁾
12⁽ஆகவே என் உள்ளம்*␢ உம்மைப் புகழ்ந்து பாடும்;␢ மௌனமாய் இராது;␢ என் கடவுளாகிய ஆண்டவரே,␢ உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.⁾
Alleluia
லூக்கா 3: 4, 6
4இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: ⁽“பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: § ‘ஆண்டவருக்காக வழியை␢ ஆயத்தமாக்குங்கள்;␢ அவருக்காக பாதையைச்␢ செம்மையாக்குங்கள்;⁾
6⁽மனிதர் அனைவரும் கடவுள் அருளும்␢ மீட்பைக் காண்பர்’.”⁾⒫
Gospel
லூக்கா 7: 24-30
24யோவானிடமிருந்து வந்த தூதர்கள் திரும்பிச் சென்ற பிறகு இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்; “நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா?
25இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடை அணிந்த ஒரு மனிதரையா? பளிச்சிடும் ஆடை அணிந்து செல்வச் செழிப்பில் வாழ்வோர் அரச மாளிகையில் அல்லவா இருக்கின்றனர்!
26பின்னர், யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
27⁽‘இதோ! என் தூதனை␢ உமக்குமுன் அனுப்புகிறேன்.␢ அவர் உமக்குமுன் உமது வழியை␢ ஆயத்தம் செய்வார்’⁾ என இவரைப் பற்றித்தான் மறை நூலில் எழுதப்பட்டுள்ளது.⒫
28மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை. ஆயினும், இறையாட்சிக்கு உட்பட்டோருள் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”⒫
29திரண்டிருந்த மக்கள் அனைவரும் வரிதண்டுவோரும் இதைக் கேட்டு, கடவுளுடைய நீதிநெறியை ஏற்று யோவானிடமிருந்து திருமுழுக்கு பெற்றனர்.
30ஆனால், பரிசேயரும் திருச்சட்ட அறிஞரும் அவர் கொடுத்த திருமுழுக்கைப் பெறாது, தங்களுக்கென்று கடவுள் வகுத்திருந்த திட்டத்தைப் புறக்கணித்தார்கள்.⒫