டிசம்பர் 2027

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

19 டிசம்பர், 2027

Fourth Sunday of Advent (O Radix Jesse)

அன்றைய திருப்பலி
First Reading

மீக்கா 5: 1-4a

1⁽அரண்சூழ் நகரில் வாழும் மக்களே!␢ உங்கள் மதில்களுக்குப் பின்னால்␢ ஒளிந்து கொள்ளுங்கள்;␢ உங்களுக்கு எதிராக␢ முற்றுகையிடப்பட்டுள்ளது;␢ இஸ்ரயேலின் ஆளுநன்␢ கோலால் கன்னத்தில் அடி பெறுவான்.⁾ 2⁽நீயோ, எப்ராத்தா எனப்படும்␢ பெத்லகேமே!␢ யூதாவின் குடும்பங்களுள்␢ மிகச் சிறியதாய் இருக்கின்றாய்!␢ ஆயினும், இஸ்ரயேலை␢ என் சார்பாக ஆளப் போகின்றவர்␢ உன்னிடமிருந்தே தோன்றுவார்;␢ அவர் தோன்றும் வழி மரபோ␢ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்.⁾ 3⁽ஆதலால்,␢ பேறுகால வேதனையில் இருப்பவள்␢ பிள்ளை பெறும்வரை␢ அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்;␢ அதன் பின்னர்␢ அவருடைய இனத்தாருள்␢ எஞ்சியிருப்போர்␢ இஸ்ரயேல் மக்களிடம்␢ திரும்பி வருவார்கள்.⁾ 4⁽அவர் வரும்போது,␢ ஆண்டவரின் வலிமையோடும்␢ தம் கடவுளாகிய ஆண்டவரது␢ பெயரின் மாட்சியோடும் விளங்கித்␢ தம் மந்தையை மேய்ப்பார்;␢ அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்;␢ ஏனெனில், உலகின்␢ இறுதி எல்லைகள்வரை␢ அப்போது அவர்␢ மேன்மை பொருந்தியவராய்␢ விளங்குவார்;⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 80: 2-3, 15-16, 18-19

2⁽எப்ராயிம், பென்யமின்,␢ மனாசேயின் முன்னிலையில்␢ உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து␢ எம்மை மீட்க வாரும்!⁾ 3⁽கடவுளே, எங்களை முன்னைய␢ நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்!␢ எம்மை மீட்குமாறு␢ உமது முக ஒளியைக் காட்டியருளும்!⁾ 15⁽உமது வலக்கை நட்டுவைத்த கிளையை,␢ உமக்கென நீர் வளர்த்த மகவைக்␢ காத்தருளும்!⁾ 16⁽அவர்கள் அதற்குத் தீ மூட்டினார்கள்;␢ அதை வெட்டித் தள்ளிவிட்டார்கள்;␢ உமது முகத்தின் சினமிகு நோக்கினால்,␢ அவர்கள் அழிந்துபோவார்களாக!⁾ 18⁽இனி நாங்கள் உம்மைவிட்டு␢ அகலமாட்டோம்;␢ எமக்கு வாழ்வு அளித்தருளும்;␢ நாங்கள் உமது பெயரைத் தொழுவோம்.⁾ 19⁽படைகளின் கடவுளான ஆண்டவரே!␢ எங்களை முன்னைய␢ நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்!␢ நாங்கள் விடுதலை பெறுமாறு␢ உமது முக ஒளியைக் காட்டியருளும்!⁾
Second Reading

எபிரேயர் 10: 5-10

5அதனால்தான் கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, ⁽“பலியையும் காணிக்கையையும்␢ நீர் விரும்பவில்லை, ஆனால்␢ ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர்.⁾ 6⁽எரிபலிகளும் பாவம் போக்கும்␢ பலிகளும் உமக்கு உகந்தவையல்ல.⁾ 7⁽எனவே நான் கூறியது:␢ என் கடவுளே,␢ உமது திருவுளத்தை நிறைவேற்ற,␢ இதோ வருகின்றேன்.␢ என்னைக் குறித்துத் திருநூல் சுருளில்␢ எழுதப்பட்டுள்ளது”⁾ என்கிறார். 8திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும்,⁽ “நீர் பலிகளையும் காணிக்கைகளையும்␢ எரிபலிகளையும் பாவம்போக்கும்␢ பலிகளையும் விரும்பவில்லை;␢ இவை உமக்கு உகந்தவையல்ல”⁾ என்று அவர் முதலில் கூறுகிறார். 9பின்னர்,⁽“உமது திருவுளத்தை நிறைவேற்ற,␢ இதோ வருகின்றேன்”⁾ என்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கிவிடுகிறார். 10இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.⒫
Alleluia

லூக்கா 1: 38

38பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
Gospel

லூக்கா 1: 39-45

39அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். 40அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். 41மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். 42அப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! 43என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? 44உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. 45ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.