டிசம்பர் 2027

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

14 டிசம்பர், 2027

John of the Cross, Priest, Doctor Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

செப்பனியா 3: 1-2, 9-13

1⁽கலகம் செய்ததும் தீட்டுப்பட்டதும்␢ மக்களை ஒடுக்கியதுமான நகருக்கு␢ ஐயோ கேடு!⁾ 2⁽எந்தச் சொல்லுக்கும் அவள்␢ செவி சாய்ப்பதில்லை;␢ கண்டிப்புரையை அவள் ஏற்பதுமில்லை;␢ ஆண்டவர்மேல் அவள்␢ நம்பிக்கை வைப்பதில்லை;␢ தன் கடவுளை அண்டி வருவதுமில்லை.⁾ 9⁽அக்காலத்தில் நான்␢ மக்களினங்களுக்குத்␢ தூய நாவினை அருள்வேன்;␢ அப்போது அவர்கள் அனைவரும்␢ ஆண்டவரின் பெயரால்␢ மன்றாடி ஒருமனப்பட்டு␢ அவருக்குப் பணிபுரிவார்கள்.⁾ 10⁽எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கும்␢ அப்பாலிருந்து என்னை மன்றாடுவோர் —␢ சிதறுண்ட என் மக்கள் —␢ எனக்குக் காணிக்கை␢ கொண்டு வருவார்கள்.⁾ 11⁽எனக்கு எதிராக எழுந்து␢ நீ செய்த குற்றங்களை முன்னிட்டு␢ அந்நாளில் அவமானம் அடையமாட்டாய்;␢ ஏனெனில், அப்பொழுது␢ இறுமாப்புடன் அக்களித்திருப்போரை␢ உன்னிடமிருந்து அகற்றிவிடுவேன்;␢ இனி ஒருபோதும் எனது திருமலையில்␢ செருக்கு அடையமாட்டாய்.⁾ 12⁽ஏழை எளியோரை உன் நடுவில்␢ நான் விட்டுவைப்பேன்;␢ அவர்கள் ஆண்டவரின் பெயரில்␢ நம்பிக்கை கொள்வார்கள்.⁾ 13⁽இஸ்ரயேலில் எஞ்சியோர்␢ கொடுமை செய்யமாட்டார்கள்;␢ வஞ்சகப் பேச்சு␢ அவர்களது வாயில் வராது;␢ அச்சுறுத்துவார் யாருமின்றி,␢ அவர்கள் மந்தைபோல் மேய்ந்து␢ இளைப்பாறுவார்கள்.”⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 34: 2-3, 6-7, 17-18, 19 and 23

2⁽நான் ஆண்டவரைப் பற்றிப்␢ பெருமையாகப் பேசுவேன்;␢ எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.⁾ 3⁽என்னுடன் ஆண்டவரை␢ பெருமைப்படுத்துங்கள்;␢ அவரது பெயரை ஒருமிக்க␢ மேன்மைப்படுத்துவோம்.⁾ 6⁽இந்த ஏழை கூவியழைத்தான்;␢ ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;␢ அவர் எல்லா நெருக்கடியினின்றும்␢ அவனை விடுவித்துக் காத்தார்.⁾ 7⁽ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை␢ அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.⁾ 17⁽நீதிமான்கள் மன்றாடும்போது,␢ ஆண்டவர் செவிசாய்க்கின்றார்;␢ அவர்களை அனைத்து␢ இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.⁾ 18⁽உடைந்த உள்ளத்தார்க்கு அருகில்␢ ஆண்டவர் இருக்கின்றார்;␢ நைந்த நெஞ்சத்தாரை␢ அவர் காப்பாற்றுகின்றார்.⁾ 19⁽நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல;␢ அவை அனைத்தினின்றும்␢ ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்.⁾
Gospel

மத்தேயு 21: 28-32

28மேலும் இயேசு, “இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ‘மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றார். 29அவர் மறுமொழியாக, ‘நான் போக விரும்பவில்லை’ என்றார். ஆனால், பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். 30அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, ‘நான் போகிறேன் ஐயா!’ என்றார்; ஆனால், போகவில்லை. 31இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” என்று கேட்டார். அவர்கள் “மூத்தவரே” என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், “வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 32ஏனெனில், யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை” என்றார்.