டிசம்பர் 2027

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

27 டிசம்பர், 2027

John, Apostle, Evangelist Feast

அன்றைய திருப்பலி
First Reading

1 யோவான் 1: 1-4

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 97: 1-2, 5-6, 11-12

1⁽ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;␢ பூவுலகம் மகிழ்வதாக!␢ திரளான தீவு நாடுகள்␢ களிகூர்வனவாக!⁾ 2⁽மேகமும் காரிருளும்␢ அவரைச் சூழ்ந்துள்ளன;␢ நீதியும் நேர்மையும்␢ அவரது அரியணையின் அடித்தளம்.⁾ 5⁽ஆண்டவர் முன்னிலையில், § அனைத்துலகின் தலைவர் முன்னிலையில்,␢ மலைகள் மெழுகென உருகுகின்றன.⁾ 6⁽வானங்கள் அவரது நீதியை␢ அறிவிக்கின்றன;␢ அனைத்து மக்களினங்களும்␢ அவரது மாட்சியைக் காண்கின்றன.⁾ 11⁽நேர்மையாளருக்கென ஒளியும்␢ நேரிய உள்ளத்தோர்க்கென␢ மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.⁾ 12⁽நேர்மையாளர்களே!␢ ஆண்டவரில் களிகூருங்கள்;␢ அவரது தூய்மையை நினைந்து␢ அவரைப் புகழுங்கள்.⁾
Gospel

யோவான் 20: 1a and 2-8

1வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். 2எனவே, அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, “ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!” என்றார். 3இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். 4இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். 5அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால், உள்ளே நுழையவில்லை. 6அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், 7இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. 8பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்.