டிசம்பர் 2027

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

8 டிசம்பர், 2027

Immaculate Conception of the Blessed Virgin Mary Solemnity. Holy Day of Obligation.

அன்றைய திருப்பலி
First Reading

தொடக்க நூல் 3: 9-15, 20

9ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார். 10“உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன். 11“நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார். 12அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான். 13ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள். 14⁽ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், § “நீ இவ்வாறு செய்ததால்,␢ கால்நடைகள், காட்டுவிலங்குகள்␢ அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய்.␢ உன் வயிற்றினால் ஊர்ந்து␢ உன் வாழ்நாள் எல்லாம்␢ புழுதியைத் தின்பாய்.⁾ 15⁽உனக்கும் பெண்ணுக்கும், § உன் வித்துக்கும் அவள் வித்துக்கும்␢ பகையை உண்டாக்குவேன்.␢ அவள் வித்து உன் தலையைக்␢ காயப்படுத்தும்.␢ நீ அதன் குதிங்காலைக்␢ காயப்படுத்துவாய்” என்றார்.⁾ 20மனிதன் தன் மனைவிக்கு ‘ஏவாள்’ என்று பெயரிட்டான்; ஏனெனில், உயிருள்ளோர் எல்லோருக்கும் அவளே தாய்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 98: 1, 2-3ab, 3cd-4

1⁽ஆண்டவருக்குப் புதியதொரு␢ பாடல் பாடுங்கள்;␢ ஏனெனில், அவர் வியத்தகு␢ செயல்கள் புரிந்துள்ளார்.␢ அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும்␢ அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.⁾ 2⁽ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்;␢ பிற இனத்தார் கண்முன்னே␢ தம் நீதியை வெளிப்படுத்தினார்.⁾ 3⁽இஸ்ரயேல் வீட்டாருக்கு␢ வாக்களிக்கப்பட்ட␢ தமது பேரன்பையும் உறுதிமொழியையும்␢ அவர் நினைவுகூர்ந்தார்.␢ உலகெங்குமுள அனைவரும்␢ நம் கடவுள் அருளிய␢ விடுதலையைக் கண்டனர்.⁾ 4⁽உலகெங்கும் வாழ்வோரே!␢ அனைவரும் ஆண்டவரை␢ ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!␢ மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப்␢ புகழ்ந்தேத்துங்கள்.⁾
Second Reading

எபேசியர் 1: 3-6, 11-12

3நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். 4நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.⒫ 5❮5-6❯அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்துவைத்தார். இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். 6Same as above 11கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப் பேற்றுக்கு உரியவரானோம். 12இவ்வாறு, கிறிஸ்துவின்மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்து பாட வேண்டுமென அவர் விரும்பினார்.⒫
Alleluia

லூக்கா 1: 28

28வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே* வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்”** என்றார்.
Gospel

லூக்கா 1: 26-38

26ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். 27அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. 28வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே* வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்”** என்றார். 29இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். 30வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். 31இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். 32அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். 33அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார். 34அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார். 35வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால், உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். 36உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். 37ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார். 38பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.