வாசகங்கள்
26 டிசம்பர், 2027
Holy Family Feast
அன்றைய திருப்பலி
First Reading
1 சாமுவேல் 1: 20-22, 24-28 or Sirach 3: 2-6, 12-14
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 84: 2-3, 5-6, 9-10 or திருப்பாடல்கள் 128: 1-2, 3, 4-5
2⁽என் ஆன்மா ஆண்டவரின்␢ கோவில் முற்றங்களுக்காக␢ ஏங்கித் தவிக்கின்றது;␢ என் உள்ளமும் உடலும்␢ என்றுமுள இறைவனை␢ மகிழ்ச்சியுடன் பாடுகின்றது.⁾
3⁽படைகளின் ஆண்டவரே!␢ என் அரசரே! என் கடவுளே!␢ உமது பீடங்களில்␢ அடைக்கலான் குருவிக்கு␢ வீடு கிடைத்துள்ளது;␢ தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச்␢ சிட்டுக் குருவிகளுக்குக்␢ கூடும் கிடைத்துள்ளது.⁾
5⁽உம்மிடருந்து வலிமை பெற்ற மானிடர்␢ பேறு பெற்றோர்;␢ அவர்களது உள்ளம் § சீயோனுக்குச் செல்லும்␢ நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது.⁾
6⁽வறண்ட ‛பாக்கா’ பள்ளத்தாக்கை␢ அவர்கள் கடந்து செல்கையில்,␢ அது நீருற்றுகள் உள்ள இடமாக␢ மாறுகின்றது;␢ முதல் பருவமழை அதனை␢ நீர்நிலைகள் நிறைந்த இடமாக்கும்.⁾
9⁽எங்கள் கேடயமாகிய கடவுளே,␢ கண்ணோக்கும்!␢ நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக்␢ கனிவுடன் பாரும்!⁾
10⁽வேற்றிடங்களில் வாழும்␢ ஆயிரம் நாள்களினும்␢ உம் கோவில் முற்றங்களில் தங்கும்␢ ஒருநாளே மேலானது;␢ பொல்லாரின் கூடாரங்களில்␢ குடியிருப்பதினும்,␢ என் கடவுளது இல்லத்தின்␢ வாயிற்காவலனாய் இருப்பதே␢ இனிமையானது.⁾
Second Reading
1 யோவான் 3: 1-2, 21-24 or Colossians 3: 12-21
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Alleluia
கொலோசையர் 3: 15a, 16a or Acts 16: 14b
15கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாயிருங்கள்.
16கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள்.
Gospel
லூக்கா 2: 41-52
41ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்;
42இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர்.
43விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது;
44பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்;
45அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
46மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார்.
47அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர்.
48அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” என்றார்.
49அவர் அவர்களிடம் “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றார்.
50அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
51பின்பு, அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.
52இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.