வாசகங்கள்
18 டிசம்பர், 2027
Advent Weekday (O Adonai)
அன்றைய திருப்பலி
First Reading
எரேமியா 23: 5-8
5ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ நாள்கள் வருகின்றன; அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள ‘தளிர்’ தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையும் நிலைநாட்டுவார்.
6அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்; இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். “யாவே சித்கேனூ”* என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.
7ஆதலால் ஆண்டவர் கூறுவது; இதோ நாள்கள் வருகின்றன. அப்போது, ‘எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அழைத்து வந்த வாழும் ஆண்டவர்மேல் ஆணை’ என்று எவரும் சொல்லார்.
8மாறாக, ‘இஸ்ரயேல் குடும்ப மரபினர் தங்கள் சொந்த நாட்டில் வாழும்படி, அவர்களை வடக்கு நாட்டிலிருந்தும் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் அழைத்து வந்த வாழும் ஆண்டவர் மேல் ஆணை’ என்று கூறுவர்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 72: 1-2, 12-13, 18-19
1⁽கடவுளே, அரசருக்கு உமது␢ நீதித்தீர்ப்பை வழங்கும்␢ ஆற்றலை அளியும்;␢ அரச மைந்தரிடம்␢ உமது நீதி விளங்கச் செய்யும்.⁾
2⁽அவர் உம் மக்களை␢ நீதியோடு ஆள்வாராக!␢ உம்முடையவரான எளியோர்க்கு␢ நீதித்தீர்ப்பு வழங்குவாராக!⁾
12⁽தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும்␢ திக்கற்ற எளியோரையும்␢ அவர் விடுவிப்பார்.⁾
13⁽வறியோர்க்கும் ஏழைகட்கும்␢ அவர் இரக்கம் காட்டுவார்;␢ ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.⁾
18⁽ஆண்டவராகிய கடவுள்,␢ இஸ்ரயேலின் கடவுள் போற்றி! போற்றி!␢ அவர் ஒருவரே␢ வியத்தகு செயல்களைப் புரிகின்றார்!⁾
19⁽மாட்சி பொருந்திய அவரது பெயர்␢ என்றென்றும் புகழப்பெறுவதாக!␢ அவரது மாட்சி␢ உலகெல்லாம் நிறைந்திருப்பதாக!␢ ஆமென், ஆமென்.⁾
Gospel
மத்தேயு 1: 18-25
18இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.
19அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.
20அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.
21அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார்.
22❮22-23❯⦃“இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்”⦄ என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள்.
23Same as above
24யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.
25மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.