ஜூலை 2028

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
இன்றுக்கு

வாசகங்கள்

10 ஜூலை, 2028

Ordinary Weekday

அன்றைய திருப்பலி
First Reading

ஒசேயா 2: 16, 17c-18, 21-22

16⁽அந்நாளில், ‘என் கணவன்’ என␢ என்னை அவள் அழைப்பாள்;␢ ‘என் பாகாலே’* என இனிமேல்␢ என்னிடம் சொல்லமாட்டாள்”␢ என்கிறார் ஆண்டவர்.⁾ 17⁽அவளுடைய நாவினின்று␢ பாகால்களின் பெயர்களை␢ நீக்கிவிடுவேன்;␢ இனிமேல் அவர்களைப்␢ பெயர் சொல்லி அழைக்க மாட்டாள்.⁾ 18⁽அந்நாளில், காட்டு விலங்குகளோடும்,␢ வானத்துப் பறவைகளோடும்,␢ நிலத்தில் ஊர்வனவற்றோடும்␢ அவர்களுக்காக நான்␢ ஓர் உடன்படிக்கை செய்வேன்;␢ வில்லையும் வாளையும் போரையும்␢ நாட்டினின்று அகற்றிவிடுவேன்;␢ அச்சமின்றி அவர்கள்␢ படுத்திருக்கச் செய்வேன்.⁾ 21⁽மேலும் அந்நாளில் நான்␢ மறுமொழி அளிப்பேன்”␢ என்கிறார் ஆண்டவர்.␢ “நான் வானத்தின் வழியாய்␢ மறுமொழி அளிப்பேன்;␢ அது நிலத்தின் வழியாய்␢ மறுமொழி தரும்.⁾ 22⁽நிலம், கோதுமை, திராட்சை இரசம்,␢ எண்ணெய் வழியாய்␢ மறுமொழி தரும்.␢ அவை இஸ்ரியேல்வழியாய்␢ மறுமொழி தரும்”␢ என்கிறார் ஆண்டவர்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 145: 2-3, 4-5, 6-7, 8-9

2⁽நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்;␢ உமது பெயரை என்றும்␢ எப்பொழுதும் புகழ்வேன்.⁾ 3⁽ஆண்டவர் மாண்புமிக்கவர்;␢ பெரிதும் போற்றுதலுக்கும் உரியவர்;␢ அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது.⁾ 4⁽ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு␢ உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்;␢ வல்லமைமிகு உம் செயல்களை␢ எடுத்துரைக்கும்.⁾ 5⁽உமது மாண்பின்␢ மேன்மையையும் மாட்சியையும்␢ வியத்தகு உம் செயல்களையும்␢ நான் சிந்திப்பேன்.⁾ 6⁽அச்சந்தரும் உம் செயல்களின்␢ வல்லமையைப்பற்றி␢ மக்கள் பேசுவார்கள்;␢ உமது மாண்பினை நான்␢ விரித்துரைப்பேன்,⁾ 7⁽அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை␢ நினைந்துக் கொண்டாடுவார்கள்;␢ உமது நீதியை எண்ணி␢ ஆர்ப்பரித்துப் பாடுவார்கள்.⁾ 8⁽ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்;␢ எளிதில் சினம் கொள்ளாதவர்;␢ பேரன்பு கொண்டவர்.⁾ 9⁽ஆண்டவர் எல்லாருக்கும்␢ நன்மை செய்பவர்;␢ தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும்␢ இரக்கம் காட்டுபவர்.⁾
Alleluia

2 திமொத்தேயு 1: 10

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

மத்தேயு 9: 18-26

18அவர்களுடன் இவ்வாறு இயேசு பேசிக்கொண்டிருந்தபொழுது, தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் அவரிடம் வந்து பணிந்து, “என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்” என்றார். 19இயேசு எழுந்து அவர் பின்னே சென்றார். இயேசுவின் சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். 20அப்பொழுது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண் அவருக்குப்பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார். 21ஏனெனில், அப்பெண், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம்பெறுவேன்” எனத் தமக்குள் சொல்லிக்கொண்டார். 22இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, “மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று” என்றார். அந்நேரத்திலிருந்தே அப்பெண் நலம் அடைந்திருந்தார். 23இயேசு அத்தலைவருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே குழல் ஊதுவோரையும் கூட்டத்தினரின் அமளியையும் கண்டார். 24அவர், “விலகிப் போங்கள்; சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்களோ அவரைப் பார்த்து நகைத்தார்கள். 25அக்கூட்டத்தினரை வெளியேற்றிய பின் அவர் உள்ளே சென்று சிறுமியின் கையைப் பிடித்தார். அவளும் உயிர்பெற்று எழுந்தாள். 26இச்செய்தி அந்நாடெங்கும் பரவியது.