வாசகங்கள்
2 ஜூலை, 2028
Thirteenth Sunday in Ordinary Time
அன்றைய திருப்பலி
First Reading
1 அரசர்கள் 19: 16b, 19-21
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 16: 1-2 and 5, 7-8, 9-10, 11
1⁽இறைவா, என்னைக் காத்தருளும்;␢ உம்மிடம் நான் அடைக்கலம்␢ புகுந்துள்ளேன்.⁾
2⁽நான் ஆண்டவரிடம் ‛நீரே என் தலைவர்;␢ உம்மையன்றி வேறு செல்வம்␢ எனக்கு இல்லை’ என்று சொன்னேன்.⁾
5⁽ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து;␢ அவரே என் கிண்ணம்;␢ எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;⁾
7⁽எனக்கு அறிவுரை வழங்கும்␢ ஆண்டவரைப் போற்றுகின்றேன்;␢ இரவில்கூட என் மனச்சான்று␢ என்னை எச்சரிக்கின்றது.⁾
8⁽ஆண்டவரை எப்போதும்␢ என் கண்முன் வைத்துள்ளேன்;␢ அவர் என் வலப்பக்கம் உள்ளார்;␢ எனவே, நான் அசைவுறேன்.⁾
9⁽என் இதயம் அக்களிக்கின்றது;␢ என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது;␢ என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.⁾
10⁽ஏனெனில், என்னைப்␢ பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்;␢ உம் அன்பனைப் படுகுழியைக்␢ காண விடமாட்டீர்.⁾
11⁽வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்;␢ உமது முன்னிலையில் எனக்கு␢ நிறைவான மகிழ்ச்சி உண்டு;␢ உமது வலப்பக்கத்தில்␢ எப்போதும் பேரின்பம் உண்டு.⁾
Second Reading
கலாத்தியர் 5: 1, 13-18
1கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்; அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை என்னும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.⒫
13அன்பர்களே, நீங்கள் உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; அந்த உரிமை வாழ்வு ஊனியல்பின் செயல்களுக்கு வாய்ப்பாய் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள்.⒫
14⁽“உன்மீது நீ அன்புகூர்வது போல␢ உனக்கு அடுத்திருப்பவர்மீதும்␢ அன்புகூர்வாயாக”␢ என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது.⁾⒫
15ஆனால், நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை!
16எனவே நான் சொல்கிறேன்; தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள்.
17ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால் நீங்கள் செய்ய விரும்பவதை உங்களால் செய்ய முடிவதில்லை.
18நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள்.⒫
Alleluia
1 சாமுவேல் 3: 9; John 6: 68c
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Gospel
லூக்கா 9: 51-62
51இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து,
52தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
53அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
54அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள்.
55அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.
56பின்பு, அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.
57அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார்.
58இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.
59இயேசு மற்றொருவரை நோக்கி, “என்னைப் பின்பற்றிவாரும்” என்றார். அவர், “முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்” என்றார்.
60இயேசு அவரைப் பார்த்து, “இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” என்றார்.⒫
61வேறொருவரும், “ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றார்.
62இயேசு அவரை நோக்கி, “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” என்றார்.