வாசகங்கள்
9 ஜூலை, 2028
Fourteenth Sunday in Ordinary Time
அன்றைய திருப்பலி
First Reading
எசாயா 66: 10-14c
10⁽எருசலேமின் மேல்␢ அன்பு கொண்ட அனைவரும்␢ அவளுடன் அகமகிழ்ந்து␢ அவள் பொருட்டு அக்களியுங்கள்;␢ அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும்␢ அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து␢ கொண்டாடி ஆர்ப்பரியுங்கள்.⁾
11⁽அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும்␢ முலைகளில் குடித்து␢ நீங்கள் நிறைவடைவீர்கள்;␢ அவள் செல்வப் பெருக்கில்␢ நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்.⁾
12⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ ஆறுபோல் நிறைவாழ்வு␢ பாய்ந்தோடச் செய்வேன்;␢ பெருக்கெடுத்த நீரோடைபோல்␢ வேற்றினத்தாரின் செல்வம்␢ விரைந்து வரச் செய்வேன்;␢ நீங்கள் பால் பருகுவீர்கள்;␢ மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்;␢ மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.⁾
13⁽தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல்␢ நான் உங்களைத் தேற்றுவேன்;␢ எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்.⁾
14⁽இதை நீங்கள் காண்பீர்கள்,␢ உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும்,␢ உங்கள் எலும்புகள்␢ பசும்புல்போல் வளரும்;␢ ஆண்டவர் தம் ஆற்றலைத்␢ தம் ஊழியருக்குக் காட்டுவார் என்பதும்␢ அவரது சினம்␢ அவர்தம் பகைவருக்கு எதிராய்␢ மூளும் என்பதும் அறியப்படும்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 66: 1-3, 4-5, 6-7, 16 and 20
1⁽அனைத்துலகோரே!␢ கடவுளைப் போற்றி␢ ஆர்ப்பரியுங்கள்!⁾
2⁽அவரது பெயரின் மாட்சியைப்␢ புகழ்ந்து பாடுங்கள்;␢ அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.⁾
3⁽கடவுளை நோக்கி␢ ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை;␢ உமது மாபெரும் ஆற்றலின் காரணமாக␢ உம் எதிரிகள் உமது முன்னலையில்␢ கூனிக் குறுகுவர்;⁾
4⁽அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்;␢ அவர்கள் உம் புகழ் பாடிடுவர்;␢ உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’␢ என்று சொல்லுங்கள். (சேலா)⁾
5⁽வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்!␢ அவர் மானிடரிடையே ஆற்றிவரும்␢ செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை.⁾
6⁽கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்;␢ ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள்.␢ அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்.⁾
7⁽அவர் தமது வலிமையால்␢ என்றென்றும் அரசாள்கிறார்!␢ அவர்தம் கண்கள் வேற்றினத்தாரைக்␢ கவனித்து வருகின்றன;␢ கலகம் செய்வோர் அவருக்கு எதிராய்த்␢ தலைதூக்காதிருப்பராக! (சேலா)⁾
16⁽கடவுளுக்கு அஞ்சி நடப்போரே!␢ அனைவரும் வாரீர்! கேளீர்!␢ அவர் எனக்குச் செய்ததனை␢ எடுத்துரைப்பேன்.⁾
20⁽என் மன்றாட்டைப் புறக்கணியாத␢ கடவுள் போற்றி!␢ தம் பேரன்பை என்னிடமிருந்து␢ நீக்காத இறைவன் போற்றி!⁾
Second Reading
கலாத்தியர் 6: 14-18
14நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.
15விருத்தசேதனம் செய்துகொள்வதும் செய்து கொள்ளாமல் இருப்பதும் ஒன்றே. புதிய படைப்பாவதே இன்றியமையாதது.
16இந்தக் கொள்கையைப் பின்பற்றுவோருக்கும் கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் அமைதியும் இரக்கமும் உரித்தாகுக!⒫
17இனிமேல் எவரும் எனக்குத் தொல்லை கொடுக்கவேண்டாம். ஏனெனில், என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்.⒫
18சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! ஆமென்.
Alleluia
கொலோசையர் 3: 15a, 16a
15கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாயிருங்கள்.
16கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள்.
Gospel
லூக்கா 10: 1-12, 17-20
1இதற்குப்பின்பு ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு* பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.
2அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.
3புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்.
4பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.
5நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள்.
6அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும்.
7அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில், வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடுவீடாய்ச் செல்ல வேண்டாம்.
8நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள்.
9அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.
10நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று,
11‘எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும், இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ எனச் சொல்லுங்கள்.
12அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விட கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.
17பின்னர், எழுபத்திரண்டு* பேரும் மகிழ்வுடன் திரும்பிவந்து, “ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன” என்றனர்.
18அதற்கு அவர், “வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன்.
19பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது.
20ஆயினும், தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதுபற்றி மகிழவேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்” என்றார்.