ஜூலை 2028

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
இன்றுக்கு

வாசகங்கள்

24 ஜூலை, 2028

Ordinary Weekday/ Sharbel Makhluf, Priest

Sharbel Makhluf, Priest
First Reading

மீக்கா 6: 1-4, 6-8

1⁽ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்:␢ நீ எழுந்து, மலைகளுக்கு முன்னிலையில்␢ உன் வழக்கைச் சொல்;␢ குன்றுகள் உன் குரல் ஒலியைக் கேட்கட்டும்.⁾ 2⁽மலைகளே, மண்ணுலகின்␢ நிலையான அடித்தளங்களே,␢ ஆண்டவரின் வழக்கைக் கேளுங்கள்;␢ ஆண்டவருக்குத் தம் மக்களோடு␢ வழக்கு ஒன்று உண்டு;␢ இஸ்ரயேலோடு அவர்␢ வாதாடப் போகின்றார்.⁾ 3⁽என் மக்களே,␢ நான் உங்களுக்கு என்ன செய்தேன்?␢ எதில் நான் உங்களைத்␢ துயரடையச் செய்தேன்?␢ எனக்கு மறுமொழி கூறுங்கள்.⁾ 4⁽நான் உங்களை எகிப்து நாட்டிலிருந்து␢ அழைத்து வந்தேன்;␢ அடிமைத்தன வீட்டிலிருந்து␢ மீட்டு வந்தேன்;␢ உங்களுக்கு முன்பாக␢ மோசேயையும், ஆரோனையும்,␢ மிரியாமையும் அனுப்பிவைத்தேன்.⁾ 6⁽ஆண்டவரின் திருமுன் வரும்போது␢ உன்னதரான கடவுளாகிய அவருக்கு␢ எதைக் கொண்டுவந்து␢ பணிந்து நிற்பேன்?␢ எரிபலிகளோடும்␢ ஒரு வயதுக் கன்றுகளோடும்␢ அவர் முன்னிலையில் வரவேண்டுமா?⁾ 7⁽ஆயிரக்கணக்கான␢ ஆட்டுக்கிடாய்கள் மேலும்␢ பல்லாயிரக்கணக்கான␢ ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும்␢ எண்ணெய் மேலும்␢ ஆண்டவர் விருப்பம் கொள்வாரோ?␢ என் குற்றத்தை அகற்ற␢ என் தலைப்பிள்ளையையும்,␢ என் பாவத்தைப் போக்க␢ நான் பெற்ற குழந்தையையும்␢ பலி கொடுக்க வேண்டுமா?⁾ 8⁽ஓ மானிடா, நல்லது எது என␢ அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே!␢ நேர்மையைக் கடைப்பிடித்தலையும்,␢ இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும்␢ உன் கடவுளுக்கு முன்பாக␢ தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர␢ வேறு எதை ஆண்டவர்␢ உன்னிடம் கேட்கின்றார்?⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 50: 5-6, 8-9, 16bc-17, 21 and 23

5⁽‛பலியிட்டு என்னோடு␢ உடன்படிக்கை செய்துகொண்ட␢ என் அடியார்களை␢ என்முன் ஒன்று கூட்டுங்கள்.’⁾ 6⁽வான்வெளி அவரது நீதியை␢ எடுத்தியம்பும்;␢ ஏனெனில், கடவுள்தாமே␢ நீதிபதியாய் வருகின்றார்! (சேலா)⁾ 8⁽நீங்கள் கொண்டுவரும்␢ பலிகளை முன்னிட்டு␢ நான் உங்களைக் கண்டிக்கவில்லை;␢ உங்கள் எரிபலிகள் எப்போதும்␢ என் முன்னிலையில் உள்ளன.⁾ 9⁽உங்கள் வீட்டின் காளைகளையோ,␢ உங்கள் தொழுவத்தின்␢ ஆட்டுக்கிடாய்களையோ,␢ நான் ஏற்றுக்கொள்வதில்லை.⁾ 16⁽ஆனால், கடவுள் பொல்லாரைப் பார்த்து␢ இவ்வாறு கூறுகின்றார்;␢ ‛என் விதிமுறைகளை ஓதுவதற்கு␢ உங்களுக்கு என்ன தகுதி?␢ என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு␢ உங்களுக்கு என்ன அருகதை?⁾ 17⁽நீங்களோ ஒழுங்குமுறையை␢ வெறுக்கின்றீர்கள்;␢ என் கட்டளைகளைத்␢ தூக்கியெறிந்து விடுகின்றீர்கள்.⁾ 21⁽இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும்,␢ நான் மௌனமாய் இருந்தேன்;␢ நானும் உங்களைப் போன்றவர் என␢ எண்ணிக் கொண்டீர்கள்;␢ ஆனால், இப்பொழுது␢ உங்களைக் கண்டிக்கின்றேன்;␢ உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன்␢ ஒவ்வொன்றாய் எடுத்துரைக்கின்றேன்.⁾ 23⁽நன்றிப்பலி செலுத்துவோர்␢ என்னை மேன்மைப்படுத்துவர்.␢ தம் வழியைச் செம்மைப்படுத்துவோர்␢ கடவுளாம் நான் அருளும்␢ மீட்பைக் கண்டடைவர்.⁾
Alleluia

திருப்பாடல்கள் 95: 8

8⁽அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில்␢ மாசாவிலும் செய்ததுபோல்,␢ உங்கள் இதயத்தைக்␢ கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.⁾
Gospel

மத்தேயு 12: 38-42

38அப்பொழுது மறைநூல் அறிஞர் சிலரும் பரிசேயர் சிலரும் இயேசுவுக்கு மறுமொழியாக, “போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம்” என்றனர். 39அதற்கு அவர் கூறியது: “இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. 40யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார். 41தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து, இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில், யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா! 42தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில், அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக் கோடியிலிருந்து வந்தவர். ஆனால், இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!