ஜூலை 2028

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
இன்றுக்கு

வாசகங்கள்

29 ஜூலை, 2028

Martha, Disciple of the Lord Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

எரேமியா 7: 1-11

1ஆண்டவர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு: 2ஆண்டவரின் இல்ல வாயிலில் நின்று நீ அறிவிக்க வேண்டிய வாக்கு இதுவே; ஆண்டவரை வழிபட இவ்வாயில்கள் வழியாகச் செல்லும் யூதாவின் மக்களே! நீங்கள் அனைவரும் கேளுங்கள். 3இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது: “உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்ப்படுத்துங்கள். நான் இந்த இடத்தில் உங்களைக் குடியிருக்கச் செய்வேன். 4“இது ஆண்டவரின் கோவில்! ஆண்டவரின் கோவில்! ஆண்டவரின் கோவில்!” என்னும் ஏமாற்றுச் சொற்களை நம்பவேண்டாம். 5நீங்கள் உங்கள் வழிகளையும் செயல்களையும் முற்றிலும் சீர்ப்படுத்திக் கொண்டால், ஒருவர் ஒருவரோடு முற்றிலும் நேர்மையுடன் நடந்துகொண்டால், 6அன்னியரையும் அனாதைகளையும் கைம்பெண்களையும் ஒடுக்காதிருந்தால், மாசற்றோரின் இரத்தத்தை இவ்விடத்தில் சிந்தாதிருந்தால், உங்களுக்கே தீங்கு விளைவிக்கும் வேற்றுத் தெய்வ வழிபாட்டை நிறுத்தி விட்டால், 7இந்த இடத்தில், முன்பே நான் உங்கள் மூதாதையர்க்கு எக்காலத்திற்குமென்று கொடுத்துள்ள இந்த நாட்டில் உங்களைக் குடியிருக்கச் செய்வேன்.⒫ 8நீங்களோ, பயனற்ற ஏமாற்றுச் சொற்களை நம்புகிறீர்கள். 9களவு, கொலை, விபச்சாரம் செய்கிறீர்கள்; பொய்யாணை இடுகிறீர்கள்; பாகாலுக்குத் தூபம் காட்டுகிறீர்கள். நீங்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களை வழிபடுகிறீர்கள். 10ஆயினும், என் பெயர் விளங்கும் இந்தக் கோவிலுள் வந்து, என்முன் நின்றுகொண்டு, “நாங்கள் பாதுகாப்பாய் உள்ளோம்” என்கிறீர்கள். அருவருப்பான இவற்றைச் செய்யவா இந்தப் பாதுகாப்பு? 11என் பெயர் விளங்கும் இந்தக் கோவில் உங்கள் பார்வையில் கள்வரின் குகையாகிவிட்டதோ? நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்,” என்கிறார் ஆண்டவர்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 84: 3, 4, 5-6a and 8a, 11

3⁽படைகளின் ஆண்டவரே!␢ என் அரசரே! என் கடவுளே!␢ உமது பீடங்களில்␢ அடைக்கலான் குருவிக்கு␢ வீடு கிடைத்துள்ளது;␢ தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச்␢ சிட்டுக் குருவிகளுக்குக்␢ கூடும் கிடைத்துள்ளது.⁾ 4⁽உமது இல்லத்தில் தங்கியிருப்போர்␢ நற்பேறு பெற்றோர்;␢ அவர்கள் எந்நாளும் உம்மைப்␢ புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். (சேலா)⁾ 5⁽உம்மிடருந்து வலிமை பெற்ற மானிடர்␢ பேறு பெற்றோர்;␢ அவர்களது உள்ளம் § சீயோனுக்குச் செல்லும்␢ நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது.⁾ 6⁽வறண்ட ‛பாக்கா’ பள்ளத்தாக்கை␢ அவர்கள் கடந்து செல்கையில்,␢ அது நீருற்றுகள் உள்ள இடமாக␢ மாறுகின்றது;␢ முதல் பருவமழை அதனை␢ நீர்நிலைகள் நிறைந்த இடமாக்கும்.⁾ 8⁽படைகளின் ஆண்டவரே,␢ என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்!␢ யாக்கோபின் கடவுளே,␢ எனக்குச் செவிசாய்த்தருளும்! (சேலா)⁾ 11⁽ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர்␢ நமக்குத் கதிரவனும்␢ கேடயமுமாய் இருக்கின்றார்;␢ ஆண்டவர் அருளையும்␢ மேன்மையையும் அளிப்பார்;␢ மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு␢ நன்மையானவற்றை வழங்குவார்.⁾
Alleluia

யோவான் 8: 12

12மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து, “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” என்றார்.
Gospel

யோவான் 11: 19-27 or Luke 10: 38-42

19சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். 20இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார். 21மார்த்தா இயேசவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். 22இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்” என்றார். 23இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார். 24மார்த்தா அவரிடம், “இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்” என்றார். 25இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். 26உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார். 27மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார்.