ஜூலை 2028

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
இன்றுக்கு

வாசகங்கள்

11 ஜூலை, 2028

Benedict, Abbot, Religious Founder Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

ஒசேயா 8: 4-7, 11-13

4⁽அவர்கள் தாங்களே அரசர்களை␢ ஏற்படுத்திக் கொண்டார்கள்;␢ அது என்னாலே அன்று;␢ அவர்களே தலைவர்களை␢ நியமித்துக் கொண்டார்கள்;␢ அதைப்பற்றியும் நான் ஒன்றுமறியேன்.␢ தங்கள் வெள்ளியாலும் பொன்னாலும்␢ தங்களுக்கெனச்␢ சிலைகளைச் செய்தார்கள்;␢ தாங்கள் அழிந்துபோகவே அவற்றைச் செய்தார்கள்.⁾ 5⁽சமாரியா மக்கள் வழிபடும்␢ கன்றுக்குட்டியை␢ நான் வெறுக்கின்றேன்;␢ என் கோபத்தீ␢ அவர்களுக்கு எதிராய் எரிகின்றது.␢ இன்னும் எத்துணைக் காலம்␢ அவர்கள் தூய்மையடையாது␢ இருப்பார்கள்?⁾ 6⁽அந்தக் கன்றுக்குட்டி␢ இஸ்ரயேலிடமிருந்து வந்ததன்றோ!␢ அது கடவுளல்லவே!␢ கைவினைஞன் ஒருவன்தானே␢ அதைச் செய்தான்!␢ சமாரியாவின் கன்றுக்குட்டி␢ தவிடுபொடியாகும்.⁾ 7⁽அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்;␢ கடும்புயலை அறுப்பார்கள்.␢ வளரும் பயிர் முற்றுவதில்லை;␢ கோதுமை நன்றாக விளைவதில்லை;␢ அப்படியே விளைந்தாலும்␢ அந்நியரே அதை விழுங்குவர்.⁾ 11⁽எப்ராயிம் பாவம் செய்வதற்கென்றே␢ பலிபீடங்கள் பல செய்துகொண்டான்;␢ அப்பீடங்களே அவன்␢ பாவம் செய்வதற்குக் காரணமாயின.⁾ 12⁽ஆயிரக்கணக்கில் நான்␢ திருச்சட்டங்களை␢ எழுதிக் கொடுத்தாலும்,␢ அவை நமக்கில்லை என்றே␢ அவர்கள் கருதுவார்கள்.⁾ 13⁽பலியை அவர்கள் விரும்புகின்றார்கள்;␢ பலி கொடுத்து, அந்த␢ இறைச்சியையும் உண்ணுகிறார்கள்;␢ அவற்றின்மேல்␢ ஆண்டவர் விருப்பங்கொள்ளவில்லை;␢ அதற்கு மாறாக,␢ அவர்கள் தீச்செயல்களை␢ நினைவில் கொள்கின்றார்;␢ அவர்கள் செய்த பாவங்களுக்குத்␢ தண்டனை வழங்குவார்;␢ அவர்களோ எகிப்து நாட்டிற்குத்␢ திரும்புவார்கள்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 115: 3-4, 5-6, 7ab-8, 9-10

3⁽நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்;␢ தம் திருவுளப்படி␢ அனைத்தையும் செய்கின்றார்.⁾ 4⁽அவர்களுடைய தெய்வச்சிலைகள்␢ வெறும் வெள்ளியும் பொன்னுமே,␢ வெறும் மனிதக் கைவேலையே!⁾ 5⁽அவற்றுக்கு வாய்கள் உண்டு;␢ ஆனால் அவை பேசுவதில்லை;␢ கண்கள் உண்டு;␢ ஆனால் அவை பார்ப்பதில்லை;⁾ 6⁽செவிகள் உண்டு;␢ ஆனால் அவை கேட்பதில்லை;␢ மூக்குகள் உண்டு;␢ ஆனால் அவை முகர்வதில்லை.⁾ 7⁽கைகள் உண்டு;␢ ஆனால் அவை தொட்டுணர்வதில்லை;␢ கால்கள் உண்டு;␢ ஆனால் அவை நடப்பதில்லை;␢ தொண்டைகள் உண்டு;␢ ஆனால் அவை குரல் எழுப்புவதில்லை.⁾ 8⁽அவற்றைச் செய்கின்றோரும்␢ அவற்றில் நம்பிக்கை கொள்ளும்␢ அனைவரும் அவற்றைப்போல் ஆவர்.⁾ 9⁽இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது␢ நம்பிக்கைக் கொள்ளுங்கள்;␢ அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார்.⁾ 10⁽ஆரோனின் குலத்தாரே!␢ ஆண்டவர்மீது␢ நம்பிக்கைக் கொள்ளுங்கள்;␢ அவரே உங்களுக்குத்␢ துணையும் கேடயமும் ஆவார்.⁾
Alleluia

யோவான் 10: 14

14❮14-15❯நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.
Gospel

மத்தேயு 9: 32-38

32அவர்கள் சென்றபின் பேய் பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். 33பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, “இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை” என்றனர். 34ஆனால், பரிசேயர், “இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்” என்றனர். 35இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப்பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். 36திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவுகொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள். 37அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. 38ஆகையால், தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார்.