ஜூலை 2028

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
இன்றுக்கு

வாசகங்கள்

31 ஜூலை, 2028

Ignatius of Loyola, Priest, Religious Founder Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

எரேமியா 13: 1-11

1ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: “நீ உனக்காக நார்ப்பட்டாலான ஒரு கச்சையை வாங்கி அதை உன் இடையில் கட்டிக் கொள். அதைத் தண்ணீரில் நனைக்காதே.” 2ஆண்டவர் சொற்படி நான் கச்சையை வாங்கி அதை என் இடையில் கட்டிக்கொண்டேன். 3எனக்கு ஆண்டவர் வாக்கு இரண்டாம் முறை அருளப்பட்டது: 4“நீ வாங்கி உன் இடையில் கட்டிக்கொண்டுள்ள கச்சையை எடுத்துக் கொள்; எழுந்து பேராத்து* ஆற்றுக்குச் செல். அங்கு அதனைப் பாறை இடுக்கில் மறைத்துவை.”⒫ 5ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி நான் சென்று பேராத்தில் அதனை மறைத்துவைத்தேன். 6பல நாள்களுக்குப் பின்னர் ஆண்டவர் என்னிடம் கூறியது: “எழுந்து பேராத்துக்குச் சென்று நான் உன்னிடம் மறைத்து வைக்கக் கட்டளையிட்ட கச்சையை அங்கிருந்து எடுத்துவா.” 7அவ்வாறே நான் பேராத்திற்குச் சென்று, அங்கு மறைத்துவைத்திருந்த இடத்திலிருந்து கச்சையைத் தோண்டி எடுத்தேன். அந்தக் கச்சையோ எதற்கும் பயன்படாத அளவில் இற்றுப் போயிருந்தது.⒫ 8அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: 9“ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வாறே யூதா, எருசலேமின் ஆணவத்தை அழிப்பேன். 10என் சொற்களுக்குச் செவிகொடுக்க மறுத்து, தங்கள் இதயப்பிடிவாதத்தின்படி நடந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் செய்து வழிபட்டுவரும் இத்தீய மக்கள் எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள். 11கச்சை ஒருவரது இடையோடு ஒட்டியிருப்பதுபோல, இஸ்ரயேல், யூதா வீட்டார் யாவரும் என்னோடு ஒன்றித்திருக்கச் செய்தேன். அவர்கள் எனக்கு மக்களாகவும் பெயராகவும் புகழாகவும் மாட்சியாகவும் இருக்கச் செய்தேன். அவர்களோ எனக்குச் செவி சாய்க்கவில்லை,” என்கிறார் ஆண்டவர்.
Responsorial Psalm

இணைச் சட்டம் 32: 18-19, 20, 21

18⁽‘உன்னை ஈன்ற பாறையைப்␢ புறக்கணித்தாய்;␢ உன்னை உருவாக்கிய கடவுளை␢ மறந்து விட்டாய்’.⁾ 19⁽தன் மைந்தரும் தம் மகளிரும்␢ தமக்குச் சினமூட்டியதை,␢ ஆண்டவர் கண்டு அவர்களை␢ இகழ்ந்து ஒதுக்கினார்.⁾ 20⁽அவர் உரைத்தார்;␢ எனது முகத்தை அவர்களிடமிருந்து␢ மறைத்துக் கொள்வேன்;␢ அவர்களது முடிவு என்னவென்று␢ நான் கவனித்துக் கொள்வேன்;␢ ஏனெனில், அவர்கள்␢ கேடுகெட்ட தலைமுறையினர்;␢ நேர்மை அறவே அற்ற பிள்ளைகள்.⁾ 21⁽இல்லாத தெய்வத்தால்␢ எனக்கு எரிச்சலூட்டினர்;␢ அவர்களின் சிலைகளால்␢ எனக்குச் சினமூட்டினர்;␢ ஒன்றுமில்லாத இனத்தால்␢ அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்;␢ மதிகெட்ட வேற்றினத்தால்␢ அவர்களுக்குச் சினமூட்டுவேன்.⁾
Alleluia

யாக்கோபு 1: 18

18தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார்.
Gospel

மத்தேயு 13: 31-35

31❮31-32❯இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “ஒருவர் கடுகு விதையை* எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும்விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.⒫ 32Same as above 33அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: “பெண் ஒருவர் புளிப்புமாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும்.” 34இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. 35“நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்” என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.