ஜூலை 2028

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
இன்றுக்கு

வாசகங்கள்

22 ஜூலை, 2028

Mary Magdalene, Disciple of the Lord Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

Songs 3: 1-4b or Second Corinthians 5: 14-17

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 63: 2, 3-4, 5-6, 8-9

2⁽உம் ஆற்றலையும் மாட்சியையும்␢ காண விழைந்து␢ உம் தூயகம் வந்து␢ உம்மை நோக்குகின்றேன்.⁾ 3⁽ஏனெனில், உமது பேரன்பு␢ உயிரினும் மேலானது;␢ என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன.⁾ 4⁽என் வாழ்க்கை முழுவதும்␢ இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்;␢ கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.⁾ 5⁽அறுசுவை விருந்தில்␢ நிறைவடைவதுபோல␢ என் உயிர் நிறைவடையும்;␢ என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால்␢ உம்மைப் போற்றும்.⁾ 6⁽நான் படுத்திருக்கையில்␢ உம்மை நினைப்பேன்;␢ இரா விழிப்புகளில்␢ உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன்.⁾ 8⁽நான் உம்மை உறுதியாகப்␢ பற்றிக்கொண்டேன்;␢ உமது வலக்கை␢ என்னை இறுகப் பிடித்துள்ளது.⁾ 9⁽என்னை அழித்துவிடத் தேடுவோர்␢ பூவுலகின் ஆழத்திற்குள் செல்வர்.⁾
Gospel

யோவான் 20: 1-2, 11-18

1வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். 2எனவே, அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, “ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!” என்றார். 11மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுது கொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். 12அங்கே வெண்ணாடை அணிந்த இருவானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள். 13அவர்கள் மரியாவிடம், “அம்மா, ஏன் அழுகிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை” என்றார். 14இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால், அங்க நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்து கொள்ளவில்லை. 15இயேசு அவரிடம், “ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றார். 16இயேசு அவரிடம், “மரியா” என்றார். மரியா திரும்பிப் பார்த்து, “ரபூனி” என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு ‘போதகரே’ என்பது பொருள். 17இயேசு அவரிடம், “என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், ‘என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்’ எனச் சொல்” என்றார். 18மகதலா மரியா சீடரிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.