ஜூலை 2028

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
இன்றுக்கு

வாசகங்கள்

16 ஜூலை, 2028

Fifteenth Sunday in Ordinary Time

அன்றைய திருப்பலி
First Reading

இணைச் சட்டம் 30: 10-14

10எனவே, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடு. சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடி. உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பு.⒫ 11ஏனெனில், இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்குப் புரியாதது இல்லை; உன்னிடமிருந்து வெகு தொலையிலும் இல்லை. 12‘நாம் அதைக்கேட்டு, நிறைவேற்றுமாறு, நமக்காக யார் விண்ணகத்துக்குப் போய், அதைக் கொண்டு வருவார்’ என்று நீ சொல்லாதவாறு, அது விண்ணில் இல்லை. 13‘நாம் அதைக்கேட்டு நிறைவேற்றுமாறு, நமக்காக யார் கடல்கடந்து சென்று, அதை நம்மிடம் கொண்டு வருவார்’ என்று நீ சொல்லாதவாறு, அது கடல்களுக்கு அப்பால் இல்லை. 14ஆனால், நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது; உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.⒫
Responsorial Psalm

திருப்பாடல்கள் 69: 14, 17, 30-31, 33-34, 36, 37 or திருப்பாடல்கள் 19: 8, 9, 10, 11

14⁽சேற்றில் நான் அமிழ்வதிலிருந்து␢ என்னைக் காத்தருளும்;␢ என்னை வெறுப்போரிடமிருந்தும்␢ ஆழ்கடலிலிருந்தும்␢ என்னை விடுவித்தருளும்.⁾ 17⁽உமது முகத்தை␢ அடியேனுக்கு மறைக்காதேயும்;␢ நான் நெருக்கடியான␢ நிலையிலிருக்கிறேன்;␢ என் மன்றாட்டுக்கு␢ விரைவில் பதில்மொழி தாரும்.⁾ 30⁽கடவுளின் பெயரை␢ நான் பாடிப் புகழ்வேன்;␢ அவருக்கு நன்றி செலுத்தி,␢ அவரை மாட்சிமைப்படுத்துவேன்;⁾ 31⁽காளையை விட␢ இதுவே ஆண்டவருக்கு உகந்தது;␢ கொம்பும் விரிகுளம்பும்␢ உள்ள எருதைவிட␢ இதுவே அவருக்கு உகந்தது.⁾ 33⁽ஆண்டவர்␢ ஏழைகளின் விண்ணப்பத்திற்குச்␢ செவிசாய்க்கின்றார்;␢ சிறைப்பட்ட தம் மக்களை␢ அவர் புறக்கணிப்பதில்லை.⁾ 34⁽வானமும் வையமும் கடல்களும்␢ அவற்றில் வாழும் யாவும்␢ அவரைப் புகழட்டும்.⁾ 36⁽ஆண்டவருடைய அடியாரின் மரபினர்␢ அதைத் தம்␢ உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்;␢ அவரது பெயர்மீது அன்பு கூர்வோர்␢ அதில் குடியிருப்பர்.⁾
Second Reading

கொலோசையர் 1: 15-20

15⁽அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்;␢ படைப்பனைத்திலும் தலைப்பேறு.⁾ 16⁽ஏனெனில், விண்ணிலுள்ளவை,␢ மண்ணிலுள்ளவை,␢ கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை,␢ அரியணையில் அமர்வோர்,␢ தலைமை தாங்குவோர், ஆட்சியாளர்,␢ அதிகாரம் கொண்டோர்␢ ஆகிய அனைவரும்*␢ அவரால் படைக்கப்பட்டனர்.␢ அனைத்தும் அவர் வழியாய்␢ அவருக்காகப் படைக்கப்பட்டன.⁾ 17⁽அனைத்துக்கும் முந்தியவர் அவரே;§ அனைத்தும் அவரோடிணைந்து␢ நிலைபெறுகின்றன.⁾ 18⁽திருச்சபையாகிய உடலுக்குத்␢ தலையும் தொடக்கமும் அவரே.␢ எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு␢ இறந்து உயிர்த்தெழுவோருள்␢ அவர் தலைப்பேறு ஆனார்.⁾ 19⁽தம் முழுநிறைவும்␢ அவருள் குடிகொள்ளக்␢ கடவுள் திருவுளம் கொண்டார்.⁾ 20⁽சிலுவையில்␢ இயேசு சிந்திய இரத்தத்தால்␢ அமைதியை நிலைநாட்டவும்␢ விண்ணிலுள்ளவை,␢ மண்ணிலுள்ளவை அனைத்தையும்␢ அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும்␢ கடவுள் திருவுளம் கொண்டார்.⁾⒫
Alleluia

யோவான் 6: 63c, 68c

63வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. 68சீமோன் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
Gospel

லூக்கா 10: 25-37

25திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். 26அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று அவரிடம் கேட்டார். 27அவர் மறுமொழியாக, ⁽‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’⁾ என்று எழுதியுள்ளது” என்றார். 28இயேசு, “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்” என்றார்.⒫ 29அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார். 30அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: “ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். 31குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். 32அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். 33ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். 34அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். 35மறுநாள் இருதெனாரியத்தை* எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்’ என்றார்.⒫ 36“கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு கேட்டார். 37அதற்கு திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரே” என்றார். இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்” என்று கூறினார்.