ஜூலை 2028

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
இன்றுக்கு

வாசகங்கள்

4 ஜூலை, 2028

Ordinary Weekday

அன்றைய திருப்பலி
First Reading

ஆமோஸ் 3: 1-8; 4: 11-12

1இஸ்ரயேல் மக்களே! கேளுங்கள்; உங்களுக்கு எதிராக — ஆம், எகிப்து நாட்டினின்று நான் அழைத்து வந்த முழுக் குடும்பமாகிய உங்களுக்கு எதிராக — ஆண்டவர் உரைக்கும் இந்த வாக்கைக் கேளுங்கள்; 2⁽“உலகத்திலுள்ள எல்லா␢ மக்களினங்களுக்குள்ளும்␢ உங்களைத்தான் நான் சிறப்பாக␢ அறிந்துகோண்டேன்;␢ ஆதலால், உங்கள்␢ தீச்செயல் அனைத்திற்காகவும்␢ நான் உங்களைத் தண்டிப்பேன்.⁾ 3⁽தங்களுக்குள் உடன்பாடு இல்லாமல்␢ இருவர் சேர்ந்து நடப்பார்களோ?⁾ 4⁽இரை அகப்படாமல் இருக்கும்போது␢ காட்டில் சிங்கம் கர்ச்சிக்குமோ?␢ ஒன்றையும் பிடிக்காமல் இருக்கையிலேயே␢ குகையிலிருந்து இளஞ்சிங்கம்␢ முழக்கம் செய்யுமோ?⁾ 5⁽வேடன் தரையில்␢ வலைவிரிக்காதிருக்கும்போதே␢ பறவை கண்ணியில்␢ சிக்கிக்கொள்வதுண்டோ?␢ ஒன்றுமே சிக்காதிருக்கும்போது␢ பொறி தரையைவிட்டுத்␢ துள்ளுவதுண்டோ?⁾ 6⁽நகரில் எக்காளம் ஊதப்படுமானால்,␢ மக்கள் அஞ்சி நடுங்காமல்␢ இருப்பார்களோ?␢ ஆண்டவர் அனுப்பவில்லையெனில்,␢ நகருக்குத் தீமை தானாக வந்திடுமோ?⁾ 7⁽தம் ஊழியர்களாகிய␢ இறைவாக்கினர்களுக்குத்␢ தம் மறைபொருளை வெளிப்படுத்தாமல்,␢ தலைவராகிய ஆண்டவர்␢ ஏதும் செய்வதில்லை.⁾ 8⁽சிங்கம் கர்ச்சனை செய்கின்றது;␢ அஞ்சி நடுங்காதவர் எவர்?␢ தலைவராகிய ஆண்டவர் பேசியிருக்க,␢ இறைவாக்கு உரைக்காதவர் எவர்?⁾ 11⁽“சோதோம், கொமோராவின் மக்களைக்␢ கடவுள் அழித்ததுபோல␢ உங்களுள் சிலரை அழித்தேன்.␢ நீங்களோ,␢ நெருப்பிலிருந்து இழுக்கப்பட்ட␢ கொள்ளிக் கட்டைபோல் ஆனீர்கள்;␢ ஆயினும் நீங்கள்␢ என்பக்கம் திரும்பவில்லை”␢ என்கிறார் ஆண்டவர்.⁾ 12⁽“ஆகையால், இஸ்ரயேலே!␢ உனக்கும் இவ்வாறே செய்வேன்,␢ இஸ்ரயேலே!␢ இப்படி நான் செய்யப் போவதால்␢ உன் கடவுளைச் சந்திக்கத் தயாராயிரு!”⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 5: 4b-6, 7, 8

4⁽ஏனெனில், நீர் பொல்லாங்கைப் பார்த்து␢ மகிழும் இறைவன் இல்லை;␢ உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.⁾ 5⁽ஆணவமிக்கோர்␢ உமது கண்முன் நிற்க மாட்டார்;␢ தீங்கிழைக்கும் அனைவரையும்␢ நீர் வெறுக்கின்றீர்.⁾ 6⁽பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்;␢ கொலை வெறியரையும் வஞ்சகரையும்␢ அருவருக்கின்றீர்.⁾ 7⁽நானோ உம் பேரருளால்␢ உமது இல்லம் சென்றிடுவேன்;␢ உம் திருத்தூயகத்தை நோக்கி␢ இறையச்சத்துடன்␢ உம்மைப் பணிந்திடுவேன்;⁾ 8⁽ஆண்டவரே, எனக்குப் பகைவர்␢ பலர் இருப்பதால்,␢ உமது நீதியின் பாதையில்␢ என்னை நடத்தும்;␢ உமது செம்மையான வழியை␢ எனக்குக் காட்டியருளும்.⁾
Alleluia

திருப்பாடல்கள் 130: 5

5⁽ஆண்டவருக்காக ஆவலுடன் நான்␢ காத்திருக்கின்றேன்;␢ என் நெஞ்சம் காத்திருக்கின்றது;␢ அவரது சொற்களுக்காக␢ ஆவலுடன் காத்திருக்கின்றேன்.⁾
Gospel

மத்தேயு 8: 23-27

23பின்பு, இயேசு படகில் ஏறவே, அவருடைய சீடர்களும் அவரோடு ஏறினார்கள். 24திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால், இயேசு தூங்கிக்கொண்டிருந்தார். 25சீடர்கள் அவரிடம் வந்து, “ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். 26இயேசு அவர்களை நோக்கி, “நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று. 27மக்களெல்லாரும், “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றவே! இவர் எத்தகையவரோ?” என்று வியந்தனர்.