வாசகங்கள்
25 ஜூலை, 2028
James, Apostle Feast
அன்றைய திருப்பலி
First Reading
2 கொரிந்தியர் 4: 7-15
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 126: 1bc-2ab, 2cd-3, 4-5, 6
1⁽சீயோனின் அடிமை நிலையை § ஆண்டவர் மாற்றினபோது,␢ நாம் ஏதோ கனவு § கண்டவர் போல இருந்தோம்.⁾
2⁽அப்பொழுது, நமது முகத்தில்␢ மகிழ்ச்சி காணப்பட்டது.␢ நாவில் களிப்பாரவாரம் எழுந்தது;␢ ‟ஆண்டவர் அவர்களுக்கு␢ மாபெரும் செயல் புரிந்தார்” என்று␢ பிற இனத்தார் தங்களுக்குள்␢ பேசிக்கொண்டனர்.⁾
3⁽ஆண்டவர் நமக்கு␢ மாபெரும் செயல் புரிந்துள்ளார்;␢ அதனால் நாம்␢ பெருமகிழ்ச்சியுறுகின்றோம்.⁾
4⁽ஆண்டவரே!␢ தென்னாட்டின் வறண்ட ஓடையை␢ நீரோடையாக␢ வான்மழை மாற்றுவதுபோல,␢ எங்கள் அடிமை நிலையை␢ மாற்றியருளும்.⁾
5⁽கண்ணீரோடு விதைப்பவர்கள்␢ அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.⁾
6⁽விதை எடுத்துச் செல்லும்போது –␢ செல்லும்போது – அழுகையோடு␢ செல்கின்றார்கள்;␢ அரிகளைச் சுமந்து வரும்போது –␢ வரும்போது – ␢ அக்களிப்போடு வருவார்கள்.⁾
Alleluia
யோவான் 15: 16
16நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே, நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.
Gospel
மத்தேயு 20: 20-28
20பின்பு செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார்.
21“உமக்கு என்ன வேண்டும்?” என்று இயேசு அவரிடம் கேட்டார். அவர், “நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்” என்று வேண்டினார்.
22அதற்கு இயேசு, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?” என்று கேட்டார். அவர்கள் “எங்களால் இயலும்” என்றார்கள்.
23அவர் அவர்களை நோக்கி, “ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்” என்றார்.
24இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர் மீதும் கோபங் கொண்டனர்.
25இயேசு அவர்களை வரவழைத்து, “பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். உயர்குடி மக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள்.
26உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.
27உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்.
28இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.