ஜூலை 2028

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
இன்றுக்கு

வாசகங்கள்

19 ஜூலை, 2028

Ordinary Weekday

அன்றைய திருப்பலி
First Reading

எசாயா 10: 5-7, 13b-16

5⁽அசீரிய நாடு!␢ சினத்தில் நான் பயன்படுத்தும்␢ கோல் அது;␢ தண்டனை வழங்க␢ நான் ஏந்தும் தடி அது.⁾ 6⁽இறைப்பற்றில்லா நாட்டினர்க்கு␢ அந்நாட்டை நான் அனுப்புகிறேன்;␢ எனக்குச் சினமூட்டின மக்களை நொறுக்க␢ அதற்கு ஆணை கொடுக்கிறேன்;␢ அம்மக்களைக் கொள்ளையிடவும்␢ அவர்கள் பொருள்களைச் சூறையாடவும்,␢ தெருவில் கிடக்கும் சேற்றைப்போல␢ அவர்களை மிதித்துப் போடவும்,␢ அதற்குக் கட்டளை தருகிறேன்.⁾ 7⁽அசீரிய அரசன் நினைப்பதோ வேறு,␢ அவனது உள்ளத்தில் எழும்␢ திட்டங்கள் வேறு;␢ மக்களினங்கள் அழிந்து நாசமாவதைத்␢ தன் இதயத்தில் எண்ணுகிறான்;␢ பல்வேறு இனத்தாரையும் வெட்டி வீழ்த்த␢ அவன் விரும்புகிறான்.⁾ 13⁽ஏனெனில் அவன் இவ்வாறு சொன்னான்:␢ “என் கைவலிமையாலே␢ நான் அதைச் செய்து முடித்தேன்;␢ என் ஞானத்தாலும் அறிவுக் கூர்மையாலும்␢ அதற்குத் திட்டங்கள் தீட்டினேன்;␢ மக்களினங்கள் தங்களிடையே வைத்துள்ள␢ எல்லைகளை அகற்றினேன்;␢ அவர்களுடைய கருவூலங்களைச் சூறையாடினேன்;␢ அரியணையில் வீற்றிருந்தோரை␢ ஒரு காளை மிதிப்பதுபோல்␢ மிதித்துப்போட்டேன்.⁾ 14⁽குருவிக் கூட்டைக் கண்டுபிடிப்பது போல்␢ என் கை மக்களினங்களின்␢ செல்வங்களைக் கண்டு␢ எடுத்துக்கொண்டது;␢ புறக்கணித்த முட்டைகளை␢ ஒருவன் பொறுக்கி எடுப்பதுபோல்␢ நாடுகள் யாவற்றையும்␢ ஒருங்கே சேர்த்துக்கொண்டேன்.␢ எனக்கெதிராக ஒருவரும்␢ இறக்கை அடிக்கவில்லை.␢ வாய் திறக்கவில்லை,␢ கீச்சென்ற ஒலியெழுப்பவுமில்லை.”⁾ 15⁽வெட்டப் பயன்படுத்துகிறவனுக்கு␢ மேலாகக் கோடரி தன்னை␢ மேன்மை பாராட்டுவதுண்டோ?␢ அறுப்பவனைவிடத்␢ தன்னைச் சிறப்புமிக்கதாக␢ வாள் கருத இயலுமோ?␢ தன்னைத் தூக்கியவனைச் சுழற்றி வீசக்␢ கைத்தடியால் கூடுமோ?␢ மரம் அல்லாத மனிதனைத் தூக்க␢ மரத்தால் ஆன கோலால் இயலுமோ?⁾ 16⁽ஆதலால் தலைவராகிய␢ படைகளின் ஆண்டவர்␢ பாழாக்கும் கொள்ளை நோயை␢ அவனுடைய கொழுத்த வீரர்கள் இடையே␢ அனுப்புவார்; அவனது மேன்மையின்கீழ்␢ தீ ஒன்றை வைப்பார்;␢ அவர் நெருப்பு மூட்டுவார்;␢ அது கொழுந்துவிட்டு எரியும்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 94: 5-6, 7-8, 9-10, 14-15

5⁽ஆண்டவரே! அவர்கள்␢ உம் மக்களை நசுக்குகின்றனர்;␢ உமது உரிமைச் சொத்தான அவர்களை␢ ஒடுக்குகின்றனர்.⁾ 6⁽கைம்பெண்டிரையும் அன்னியரையும்␢ அவர்கள் வெட்டி வீழ்த்துகின்றனர்;␢ திக்கற்றவரை அவர்கள்␢ கொலை செய்கின்றனர்.⁾ 7⁽‘ஆண்டவர் இதைக்␢ கண்டு கொள்வதில்லை;␢ யாக்கோபின் கடவுள்␢ கவனிப்பதில்லை’ என்கின்றனர்.⁾ 8⁽மக்களிடையே அறிவிலிகளாய்␢ இருப்போரே, உணருங்கள்;␢ மதிகேடரே, எப்பொழுது நீங்கள்␢ அறிவு பெறுவீர்கள்?⁾ 9⁽செவியைப் பொருத்தியவர்␢ கேளாதிருப்பாரோ?␢ கண்ணை உருவாக்கியவர்␢ காணாதிருப்பாரோ?⁾ 10⁽மக்களினங்களைக் கண்டிப்பவர்,␢ மானிடருக்கு அறிவூட்டுபவர்␢ தண்டியாமல் இருப்பாரோ?⁾ 14⁽ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்;␢ தம் உரிமைச் சொத்தாம்␢ அவர்களைக் கைவிடார்.⁾ 15⁽தீர்ப்பு வழங்கும் முறையில்␢ மீண்டும் நீதி நிலவும்;␢ நேரிய மனத்தினர் அதன்வழி நடப்பர்.⁾
Alleluia

மத்தேயு 11: 25

25அவ்வேளையில் இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
Gospel

மத்தேயு 11: 25-27

25அவ்வேளையில் இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். 26ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். 27என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.