வாசகங்கள்
12 ஜூலை, 2028
Ordinary Weekday
அன்றைய திருப்பலி
First Reading
ஒசேயா 10: 1-3, 7-8, 12
1⁽இஸ்ரயேல் தழைத்து வளர்ந்த␢ திராட்சைக்கொடி, அது மிகுதியான␢ கனிகளைத்␢ தனக்கே தாங்கி நிற்கின்றது;␢ எவ்வளவு மிகுதியாகக்␢ கனிகளைக் கொடுத்ததோ,␢ அவ்வளவு மிகுதியாய்ப்␢ பலிபீடங்களை அமைத்தது;␢ எத்தகைய சிறப்புடன்␢ நாடு செழிப்புற்றதோ,␢ அதற்கு இணையாய்ச்␢ சிலைத் தூண்கள்␢ சிறப்புப் பெற்றன.⁾
2⁽இருமனம் கொண்ட␢ மக்களாகிய அவர்கள்,␢ தங்கள் குற்றத்திற்காகத்␢ தண்டனை பெறுவார்கள்;␢ ஆண்டவர் அவர்களுடைய␢ பலிபீடங்களைத் தகர்த்திடுவார்;␢ அவர்களுடைய சிலைத் தூண்களை␢ நொறுக்கிடுவார்.⁾
3⁽அப்போது அவர்கள்,␢ “நமக்கு அரசன் இல்லை;␢ ஆண்டவருக்கு நாம்␢ அஞ்சி நடக்கவில்லை;␢ அரசன் இருந்தாலும்,␢ நமக்கு என்ன செய்வான்?”␢ என்பார்கள்.⁾
7⁽சமாரியாவின் அரசன்␢ நீர்மேல் குமிழிபோல் அழிந்துபோவான்.⁾
8⁽இஸ்ரயேலின் பாவமாகிய␢ சிலை வழிபாட்டின்␢ உயர்ந்த இடமெல்லாம் அழிக்கப்படும்;␢ முள்களும், முட்புதர்களும்␢ அவற்றின் பலிபீடங்கள்மேல் வளரும்;␢ அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து,␢ ‘எங்களை மூடிக்கொள்ளுங்கள்’␢ குன்றுகளைப் பார்த்து,␢ ‘எங்கள்மேல் விழுங்கள்’␢ என்று சொல்வார்கள்.⁾
12⁽நீதியை நீங்கள்␢ விதைத்துக் கொள்ளுங்கள்;␢ அன்பின் கனியை␢ அறுவடை செய்யுங்கள்;␢ உங்கள் தரிசு நிலத்தை␢ உழுது பண்படுத்துங்கள்;␢ ஏனெனில் ஆண்டவர் வந்து␢ உங்கள்மேல் நேர்மையைப் பொழியுமாறு␢ நீங்கள் அவரைத் தேடும் காலம்␢ நெருங்கிவந்துவிட்டது.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 105: 2-3, 4-5, 6-7
2⁽அவருக்குப் பாடல் பாடுங்கள்;␢ அவரைப் புகழ்ந்தேத்துங்கள்!␢ அவர்தம் வியத்தகு செயல்கள்␢ அனைத்தையும் எடுத்துரையுங்கள்!⁾
3⁽அவர்தம் திருப்பெயரை␢ மாட்சிப்படுத்துங்கள்;␢ ஆண்டவரைத் தேடுவோரின் இதயம்␢ அக்களிப்பதாக!⁾
4⁽ஆண்டவரையும்␢ அவரது ஆற்றலையும் தேடுங்கள்!␢ அவரது திருமுகத்தை␢ இடையறாது நாடுங்கள்!⁾
5⁽அவர் செய்த வியத்தகு செயல்களை␢ நினைவு கூருங்கள்!␢ அவர்தம் அருஞ்செயல்களையும்,␢ அவரது வாய் மொழிந்த␢ நீதித் தீர்ப்புகளையும்␢ நினைவில் கொள்ளுங்கள்.⁾
6⁽அவரின் ஊழியராம்␢ ஆபிரகாமின் வழிமரபே!␢ அவர் தேர்ந்துகொண்ட␢ யாக்கோபின் பிள்ளைகளே!⁾
7⁽அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்!␢ அவரின் நீதித்தீர்ப்புகள்␢ உலகம் அனைத்திற்கும் உரியன.⁾
Alleluia
மாற்கு 1: 15
15“காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார்.
Gospel
மத்தேயு 10: 1-7
1இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
2அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர்கள் பின்வருமாறு; முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு, அவருடைய சகோதரர் யோவான்,
3பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரி தண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு,
4தீவிரவாதியாய் இருந்த சீமோன்*, இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து.
5இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: “பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.
6மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.
7அப்படிச் செல்லும்போது ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள்.