வாசகங்கள்
27 ஜூலை, 2028
Ordinary Weekday
அன்றைய திருப்பலி
First Reading
எரேமியா 2: 1-3, 7-8, 12-13
1⁽ஆண்டவரின் வாக்கு எனக்கு␢ அருளப்பட்டது:⁾
2⁽“நீ சென்று எருசலேம் நகரினர்␢ அனைவரும் கேட்கும் முறையில்␢ இவ்வாறு பறைசாற்று.␢ ஆண்டவர் கூறுவது இதுவே;␢ உன் இளமையின் அன்பையும்␢ மணமகளுக்குரிய காதலையும்␢ விதைக்கப்படாத பாலைநிலத்தில்␢ நீ என்னை எவ்வாறு␢ பின்பற்றினாய் என்பதையும்␢ நான் நினைவுகூர்கிறேன்.⁾
3⁽இஸ்ரயேல் ஆண்டவருக்கு␢ அர்ப்பணிக்கப்பட்டது;␢ அவரது அறுவடையின்␢ முதற்கனியாய் இருந்தது;␢ அதனை உண்டவர் அனைவரும்␢ குற்றவாளிகள் ஆயினர்;␢ அவர்கள்மேல்␢ தீமையே வந்து சேர்ந்தது,␢ என்கிறார் ஆண்டவர்.⁾
7⁽செழிப்பான நாட்டுக்கு␢ அதன் கனிகளையும்␢ நலன்களையும் நுகருமாறு␢ நான் உங்களை அழைத்து வந்தேன்.␢ நீங்களோ, அந்நாட்டிற்குள் வந்து␢ அதனைத் தீட்டுப்படுத்தினீர்கள்;␢ எனது உரிமைச் சொத்தை நீங்கள்␢ அருவருப்புக்குள்ளாக்கினீர்கள்.⁾
8⁽குருக்கள், “ஆண்டவர் எங்கே?”␢ என்று கேட்கவில்லை;␢ திருச்சட்டத்தைப் போதிப்போர்␢ என்னை அறியவில்லை;␢ ஆட்சியாளர்* எனக்கு எதிராகக்␢ கலகம் செய்தனர்;␢ இறைவாக்கினர் பாகால் பெயரால் பேசிப்␢ பயனற்றவற்றைப் பின்பற்றினர்.⁾
12⁽வானங்களே இதைக் கண்டு␢ திடுக்கிடுங்கள்;␢ அஞ்சி நடுங்கித் திகைத்து நில்லுங்கள்,␢ என்கிறார் ஆண்டவர்.⁾
13⁽ஏனெனில், என் மக்கள்␢ இரண்டு தீச்செயல்கள் செய்தார்கள்;␢ பொங்கிவழிந்தோடும் நீரூற்றாகிய␢ என்னைப் புறக்கணித்தார்கள்;␢ தண்ணீர் தேங்காத,␢ உடைந்த குட்டைகளைத்␢ தங்களுக்கென்று␢ குடைந்து கொண்டார்கள்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 36: 6-7ab, 8-9, 10-11
6⁽ஆண்டவரே, உமது நீதி␢ இறைவனின் மலைகள்போல் உயர்ந்தது;␢ உம் தீர்ப்புகள் கடல்போல்␢ ஆழமானவை;␢ மனிதரையும் விலங்கையும் காப்பவர் நீரே;⁾
7⁽கடவுளே, உமது பேரன்பு␢ எத்துணை அருமையானது!␢ மானிடர் உம் இறக்கைகளின் நிழலில்␢ புகலிடம் பெறுகின்றனர்.⁾
8⁽உமது இல்லத்தின் செழுமையால்␢ அவர்கள் நிறைவு பெறுகின்றனர்;␢ உமது பேரின்ப நீரோடையில்␢ அவர்கள் தாகத்தைத் தணிக்கின்றீர்.⁾
9⁽ஏனெனில், வாழ்வு தரும் ஊற்று␢ உம்மிடமே உள்ளது; § உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம்.⁾
10⁽உம்மை அறிந்தோர்க்கு␢ உமது பேரன்பையும்,␢ நேரிய உள்ளத்தோர்க்கு உமது நீதியையும்␢ தொடர்ந்து வழங்கியருளும்!⁾
11⁽செருக்குற்றோரின் கால்␢ என்னை நசுக்க விடாதேயும்!␢ பொல்லாரின் கை␢ என்னைப் பிடிக்க விடாதேயும்!⁾
Alleluia
மத்தேயு 11: 25
25அவ்வேளையில் இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
Gospel
மத்தேயு 13: 10-17
10சீடர்கள் அவரருகே வந்து, “ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?” என்று கேட்டார்கள்.
11அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: “விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை.
12உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.
13அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான், நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன்.
14இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: ⁽‘நீங்கள் உங்கள் காதால்␢ தொடர்ந்து கேட்டும்␢ கருத்தில் கொள்வதில்லை.␢ உங்கள் கண்களால்␢ பார்த்துக்கொண்டேயிருந்தும்␢ உணர்வதில்லை.⁾
15⁽இம்மக்களின் நெஞ்சம்␢ கொழுத்துப்போய்விட்டது;␢ காதும் மந்தமாகிவிட்டது.␢ இவர்கள் தம் கண்களை␢ மூடிக்கொண்டார்கள்;␢ எனவே, கண்ணால் காணாமலும்␢ காதால் கேளாமலும்␢ உள்ளத்தால் உணராமலும்␢ மனம் மாறாமலும் இருக்கின்றார்கள்.␢ நானும் அவர்களைக்␢ குணமாக்காமல் இருக்கிறேன்.’⁾
16உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில், அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன.
17நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால், அவர்கள் கேட்கவில்லை.