வாசகங்கள்
11 செப்டம்பர், 2027
Ordinary Weekday/ Optional Memorial of the Blessed Virgin Mary
Optional Memorial of the Blessed Virgin Mary
First Reading
1 திமொத்தேயு 1: 15-17
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 113: 1b-2, 3-4, 5a and 6-7
1⁽அல்லேலூயா!␢ ஆண்டவரின் ஊழியர்களே,␢ அவரைப் புகழுங்கள்.␢ அவரது பெயரைப் போற்றுங்கள்.⁾
2⁽ஆண்டவரது பெயர்␢ வாழ்த்தப்பெறுவதாக!␢ இப்பொழுதும் எப்பொழுதும்␢ வாழ்த்தப்பெறுவதாக!⁾
3⁽கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை␢ ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக!⁾
4⁽மக்களினங்கள் அனைத்திற்கும்␢ ஆண்டவர் மேலானவர்;␢ வானங்களையும்விட உயர்ந்து␢ அவரது மாட்சி.⁾
5⁽நம் கடவுளாகிய ஆண்டவருக்கு␢ நிகர் யார்?␢ அவர்போல வானளாவிய உயரத்தில்␢ வீற்றிருப்பவர் யார்?⁾
6⁽அவர் வானத்தையும் வையகத்தையும்␢ குனிந்து பார்க்கின்றார்;⁾
7⁽ஏழைகளைத் தூசியிலிருந்து␢ அவர் தூக்கி நிறுத்துகின்றார்;␢ வறியரைக் குப்பை மேட்டிலிருந்து␢ கைதூக்கி விடுகின்றார்;⁾
Alleluia
யோவான் 14: 23
23அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.
Gospel
லூக்கா 6: 43-49
43“கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை.
44ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால், முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை.
45நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.
46“நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என ஏன் கூப்பிடுகிறீர்கள்?
47என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றின்படி செயல்படும் எவரும் யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்;
48அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின் மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார். வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை; ஏனென்றால், அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது.
49நான் சொல்வதைக் கேட்டும் அதன்படி செயல்படாதவரோ, அடித்தளம் இல்லாமல் மண்மீது வீடு கட்டியவருக்கு ஒப்பாவார். ஆறு பெருக்கெடுத்து அதன்மேல் மோதிய உடனே அது விழுந்தது; அவ்வீட்டுக்குப் பேரழிவு ஏற்பட்டது.”