செப்டம்பர் 2027

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
2627282930
இன்றுக்கு

வாசகங்கள்

17 செப்டம்பர், 2027

Ordinary Weekday/ Robert Bellarmine, Bishop, Religious, Doctor

Robert Bellarmine, Bishop, Religious, Doctor
First Reading

1 திமொத்தேயு 6: 2c-12

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 49: 6-7, 8-10, 17-18, 19-20

6⁽தம் செல்வத்தில்␢ நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ␢ தம் செல்வப்பெருக்கைக் குறித்துப்␢ பெருமையாகப் பேசுகின்றனர்.⁾ 7⁽உண்மையில், தம்மைதாமே␢ மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது;␢ தம் உயிரை மீட்க எதையும்␢ கடவளுக்குத் தர இயலாது.⁾ 8⁽மனித உயிரின் ஈட்டுத் தொகை␢ மிகப் பெரிது;␢ எவராலும் அதனைச் செலுத்த இயலாது.⁾ 9⁽ஒருவரால் என்றென்றும்␢ வாழ்ந்திடமுடியுமா?␢ படுகுழியைக் காணாமல்␢ இருந்திட முடியுமா?⁾ 10⁽ஏனெனில், அறிவிலிகளும் மதிகேடரும்␢ மாண்டழிவதுபோல,␢ ஞானமுள்ளோரும் உயிர் துறப்பதை␢ நாம் காண்கின்றோம் அன்றோ!␢ அவர்கள் எல்லாருமே தத்தம் செல்வத்தைப்␢ பிறருக்கு விட்டுச்செல்கின்றனர்.⁾ 17⁽ஏனெனில் சாகும்போது அவர்கள்␢ எதையும் எடுத்துப் போவதில்லை;␢ அவர்களது செல்வமும்␢ அவர்கள்பின் செல்வதில்லை.⁾ 18⁽உயிரோடிருக்கையில் அவர்கள் தம்மை␢ ஆசிபெற்றோர் என்று கருதினாலும்,␢ ‛நீங்கள் நன்மையையே␢ நாடினீர்கள்’ என␢ மக்கள் அவர்களைப் புகழ்ந்தாலும்,⁾ 19⁽அவர்கள் தம் மூதாதையர் கூட்டத்தோடு␢ சேர்ந்து கொள்வர்;␢ ஒருபோதும் பகலொளியைக்␢ காணப் போவதில்லை.⁾ 20⁽மனிதர் தம் மேன்மையிலேயே␢ நிலைத்திருக்க முடியாது;␢ அவர்கள் விலங்குகளைப் போலவே␢ மாண்டழிவர்.⁾
Alleluia

மத்தேயு 11: 25

25அவ்வேளையில் இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
Gospel

லூக்கா 8: 1-3

1அதற்குப்பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர். 2பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் 3ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.