வாசகங்கள்
24 செப்டம்பர், 2027
Ordinary Weekday
அன்றைய திருப்பலி
First Reading
ஆகாய் 2: 1-9
1ஏழாம் மாதத்தின் இருபத்தோராம் நாளன்று, ஆண்டவரின் வாக்கு இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக அருளப்பட்டது:
2“யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமாகிய செருபாபேலிடமும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவிடமும் மக்களுள் எஞ்சியிருப்போர் அனைவரிடமும் இப்பொழுது நீ போய் இவ்வாறு சொல்:
3‛இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைக் கண்டவர் எவராகிலும் உங்களிடையே இன்னும் இருக்கின்றனரா? இப்போது இது உங்களுக்கு எக்கோலத்தில் தோன்றுகிறது? இது உங்கள் பார்வையில் ஒன்றும் இல்லாததுபோல் தோன்றுகிறது அல்லவா?
4ஆயினும் செருபாபேலே! மன உறுதியோடிரு,’ என்கிறார் ஆண்டவர். ‛தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவே! மன உறுதியோடிரு; நாட்டிலுள்ள அனைத்து மக்களே, ஊக்கம் கொள்ளுங்கள்; பணியைத் தொடருங்கள்; ஏனெனில் நான் உங்களோடு இருக்கிறேன்’ என்கிறார் படைகளின் ஆண்டவர்.”
5“நீங்கள் எகிப்தினின்று புறப்பட்டு வந்தபோது உங்களுக்கு நான் அளித்த வாக்குறுதியின்படி, உங்கள் நடுவில் எனது ஆவி நிலைகொண்டிருக்கின்றது; அஞ்சாதீர்கள்.⒫
6ஏனெனில் படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ‛இன்னும் சிறிது காலத்தில் நான் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும் பாலைநிலத்தையும் நடுக்கமுறச் செய்வேன்.
7வேற்றினத்தார் அனைவரையும் நிலைக்குலையச் செய்வேன். அப்போது வேற்றினத்தார் அனைவரின் விருப்பத்திற்குரியவைகளும் இங்கு வந்து சேரும்; இந்தக் கோவிலை நான் மாட்சியால் நிரப்புவேன்’ என்கிறார் படைகளின் ஆண்டவர்.
8‛வெள்ளி எனக்கு உரியது, பொன்னும் எனக்கு உரியது’, என்கிறார் படைகளின் ஆண்டவர்.
9‛இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைவிடப் பின்னைய மாட்சி மிகுதியாய் இருக்கும்’, என்கிறார் படைகளின் ஆண்டவர். ‛இந்த இடத்தில் நான் நலம் நல்குவேன்’, என்கிறார் படைகளின் ஆண்டவர்.”
Responsorial Psalm
திருப்பாடல்கள் 43: 1, 2, 3, 4
1⁽கடவுளே, என் நேர்மையை § நிலைநாட்டும்;␢ இறைப்பற்றில்லா இனத்தோடு␢ என் வழக்குக்காக வாதிடும்;␢ வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த␢ மனிதர் கையினின்று␢ என்னை விடுவித்தருளும்.⁾
2⁽ஏனெனில் கடவுளே! நீரே என் ஆற்றல்;␢ ஏன் என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்?␢ எதிரியால் ஒடுக்கப்பட்டு,␢ நான் ஏன் துயருடன் நடமாடவேண்டும்?⁾
3⁽உம் ஒளியையும் உண்மையையும்␢ அனுப்பியருளும்;␢ அவை என்னை வழி நடத்தி,␢ உமது திருமலைக்கும்␢ உமது உறைவிடத்திற்கும்␢ கொண்டுபோய்ச் சேர்க்கும்.⁾
4⁽அப்பொழுது, நான்␢ கடவுளின் பீடம் செல்வேன்;␢ என் மன மகிழ்ச்சியாகிய␢ இறைவனிடம் செல்வேன்;␢ கடவுளே! என் கடவுளே!␢ யாழிசைத்து ஆர்ப்பரித்து␢ உம்மைப் புகழ்ந்திடுவேன்.⁾
Alleluia
மாற்கு 10: 45
45ஏனெனில், மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய* மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.
Gospel
லூக்கா 9: 18-22
18இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று அவர் கேட்டார்.
19அவர்கள் மறுமொழியாக, “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள்.
20“ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்?” என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, “நீர் கடவுளின் மெசியா” என்று உரைத்தார்.
21இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.
22மேலும் இயேசு, “மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” என்று சொன்னார்.