செப்டம்பர் 2027

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
2627282930
இன்றுக்கு

வாசகங்கள்

3 செப்டம்பர், 2027

Gregory the Great, Pope, Religious, Doctor Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

கொலோசையர் 1: 15-20

15⁽அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்;␢ படைப்பனைத்திலும் தலைப்பேறு.⁾ 16⁽ஏனெனில், விண்ணிலுள்ளவை,␢ மண்ணிலுள்ளவை,␢ கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை,␢ அரியணையில் அமர்வோர்,␢ தலைமை தாங்குவோர், ஆட்சியாளர்,␢ அதிகாரம் கொண்டோர்␢ ஆகிய அனைவரும்*␢ அவரால் படைக்கப்பட்டனர்.␢ அனைத்தும் அவர் வழியாய்␢ அவருக்காகப் படைக்கப்பட்டன.⁾ 17⁽அனைத்துக்கும் முந்தியவர் அவரே;§ அனைத்தும் அவரோடிணைந்து␢ நிலைபெறுகின்றன.⁾ 18⁽திருச்சபையாகிய உடலுக்குத்␢ தலையும் தொடக்கமும் அவரே.␢ எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு␢ இறந்து உயிர்த்தெழுவோருள்␢ அவர் தலைப்பேறு ஆனார்.⁾ 19⁽தம் முழுநிறைவும்␢ அவருள் குடிகொள்ளக்␢ கடவுள் திருவுளம் கொண்டார்.⁾ 20⁽சிலுவையில்␢ இயேசு சிந்திய இரத்தத்தால்␢ அமைதியை நிலைநாட்டவும்␢ விண்ணிலுள்ளவை,␢ மண்ணிலுள்ளவை அனைத்தையும்␢ அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும்␢ கடவுள் திருவுளம் கொண்டார்.⁾⒫
Responsorial Psalm

திருப்பாடல்கள் 100: 1b-2, 3, 4, 5

1⁽அனைத்துலகோரே!␢ ஆண்டவரை ஆர்ப்பரித்து␢ வாழ்த்துங்கள்!⁾ 2⁽ஆண்டவரை␢ மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!␢ மகிழ்ச்சிநிறை பாடலுடன்␢ அவர் திருமுன் வாருங்கள்!⁾ 3⁽ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!␢ அவரே நம்மைப் படைத்தவர்!␢ நாம் அவர் மக்கள்,␢ அவர் மேய்க்கும் ஆடுகள்!⁾ 4⁽நன்றியோடு அவர்தம்␢ திருவாயில்களில் நுழையுங்கள்!␢ புகழ்ப்பாடலோடு அவர்தம்␢ முற்றத்திற்கு வாருங்கள்!␢ அவருக்கு நன்றி செலுத்தி,␢ அவர் பெயரைப் போற்றுங்கள்!⁾ 5⁽ஏனெனில், ஆண்டவர் நல்லவர்;␢ என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;␢ தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.⁾
Alleluia

யோவான் 8: 12

12மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து, “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” என்றார்.
Gospel

லூக்கா 5: 33-39

33பின்பு, அவர்கள் இயேசுவை நோக்கி, “யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பிருந்து மன்றாடி வருகிறார்கள்; பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே!” என்றார்கள். 34இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் மணவிருந்தினர்களோடு இருக்கும் வரை அவர்களை நோன்பு இருக்கச் செய்யலாமா? 35ஆனால், மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும்; அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்” என்றார்.⒫ 36அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார்: “எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும்; புதிய துண்டும் பழையதோடு பொருந்தாது.”⒫ 37“அதுபோலப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை; ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும். மதுவும் சிந்திப் போகும்; தோற்பைகளும் பாழாகும். 38புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும். 39பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார்; ஏனெனில், ‘பழையதே நல்லது’ என்பது அவர் கருத்து.”