வாசகங்கள்
4 செப்டம்பர், 2027
Ordinary Weekday/ Optional Memorial of the Blessed Virgin Mary
Optional Memorial of the Blessed Virgin Mary
First Reading
கொலோசையர் 1: 21-23
21முன்பு நீங்கள் இறைவனோடு உறவற்றவர்களாய் இருந்தீர்கள்; அவரைப் பகைக்கும் உள்ளம் உடையோராய்ச் தீச்செயல்கள் புரிந்து வந்தீர்கள்.
22இப்பொழுது, நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச் சொல்லுக்கு ஆளாகாதோராகவும் தம்முன் விளங்குமாறு ஊனுடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக் கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.
23நீங்கள் நற்செய்தியைக் கேட்டுப் பெற்றுக்கொண்ட எதிர்நோக்கை இழந்துவிடாமல் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அதில் உறுதியாக நிலைத்திருங்கள். உலகெங்கும் படைப்பனைத்துக்கும் நற்செய்தி பறைசாற்றப்பட்டுள்ளது. பவுலாகிய நான் இந்நற்செய்தியை அறிவிக்கும் திருத்தொண்டன் ஆனேன்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 54: 3-4, 6 and 8
3⁽ஏனெனில், செருக்குற்றோர்␢ எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்;␢ கொடியவர் என் உயிரைப்␢ பறிக்கப் பார்க்கின்றனர்;␢ அவர்கள் கடவுளை␢ அறவே நினைப்பதில்லை. (சேலா)⁾
4⁽இதோ! கடவுள் எனக்குத்␢ துணைவராய் இருக்கின்றார்;␢ என் தலைவர் என் வாழ்வுக்கு␢ ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்;⁾
6⁽தன்னார்வத்தோடு உமக்குப்␢ பலி செலுத்துவேன்;␢ ஆண்டவரே, உமது பெயருக்கு␢ நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று.’⁾
Alleluia
யோவான் 14: 6
6இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே.* என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.⒫
Gospel
லூக்கா 6: 1-5
1ஓர் ஓய்வுநாளில் இயேசு வயல்வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர்
2பரிசேயருள் சிலர், “ஓய்வுநாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?” என்று கேட்டனர்.
3அதற்கு இயேசு மறுமொழியாக, “தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்த போது, தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா?
4அவர் இறை இல்லத்திற்குள் சென்று, குருக்கள் மட்டுமே அன்றி வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களை எடுத்துத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?” என்று கூறினார்.
5மேலும் அவர்களிடம், “ஓய்வுநாளும் மானிடமகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார்.