வாசகங்கள்
20 செப்டம்பர், 2027
Andrew Kim Taegon, Priest, Martyr, Paul Chong Hasang, Catechist, Martyr, and Companions, Martyrs Obligatory Memorial
அன்றைய திருப்பலி
First Reading
எஸ்ரா 1: 1-6
1எரேமியா வழியாக வெளிப்படுத்தப்பட்ட இறைவாக்கு நிறைவேறும்படி பாரசீக மன்னர் சைரசின் முதல் ஆண்டில் அவரது உள்ளுணர்வை ஆண்டவர் தூண்டினார். எனவே சைரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்து, அதைத் தம் நாடெங்கும் எழுத்துமூலம் வெளியிட்டார்.⒫
2“பாரசீக மன்னர் சைரசு கூறுவது; விண்ணகக் கடவுளான ஆண்டவர் மண்ணகத்திலுள்ள எல்லா அரசுகளையும் என்னிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் யூதாவிலுள்ள எருசலேமில் தமக்கென ஒரு கோவிலைக் கட்டும்படி அவர் என்னை நியமித்துள்ளார்.
3அவருடைய எல்லா மக்களிலும் யார் யார் அவரைச் சார்ந்துள்ளனரோ — கடவுள் அவர்களோடு இருப்பாராக! — அவர்கள், யூதாவிலுள்ள எருசலேமுக்குச் சென்று, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு ஒரு கோவிலைக் கட்டுவார்களாக! எருசலேமில் இருக்கும் அவரே கடவுள்!
4எஞ்சியுள்ளவன் ஒவ்வொருவனும் எங்குத் தங்கியிருந்தாலும் அங்கு வாழும் மக்கள், எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலுக்குத் தன்னார்வக் காணிக்கை அனுப்புவதோடு, அவனுக்கும் வெள்ளி, பொன், மற்றப்பொருள்கள், கால்நடைகள் ஆகியவற்றைக் கொடுத்து உதவுவார்களாக!”⒫
5அப்போது யூதா, பென்யமினுடைய குலத்தலைவர்களும், குருக்களும் லேவியரும், எருசலேமில் ஆண்டவரின் கோவிலைக் கட்டச் செல்லுமாறு ஆண்டவரால் தூண்டப்பெற்ற அனைவரும் புறப்பட்டார்கள்.
6அவர்களைச் சூழ்ந்து வாழ்ந்த மக்கள் தன்னார்வக் காணிக்கை அனைத்தும் கொடுத்ததுமல்லாமல் அவர்களுக்கு வெள்ளிப் பாத்திரங்களையும், பொன்னையும் மற்றப் பொருள்களையும், கால்நடைகளையும், விலையுயர்ந்த பொருள்களையும் கொடுத்து உதவினார்கள்.⒫
Responsorial Psalm
திருப்பாடல்கள் 126: 1b-2ab, 2cd-3, 4-5, 6
1⁽சீயோனின் அடிமை நிலையை § ஆண்டவர் மாற்றினபோது,␢ நாம் ஏதோ கனவு § கண்டவர் போல இருந்தோம்.⁾
2⁽அப்பொழுது, நமது முகத்தில்␢ மகிழ்ச்சி காணப்பட்டது.␢ நாவில் களிப்பாரவாரம் எழுந்தது;␢ ‟ஆண்டவர் அவர்களுக்கு␢ மாபெரும் செயல் புரிந்தார்” என்று␢ பிற இனத்தார் தங்களுக்குள்␢ பேசிக்கொண்டனர்.⁾
3⁽ஆண்டவர் நமக்கு␢ மாபெரும் செயல் புரிந்துள்ளார்;␢ அதனால் நாம்␢ பெருமகிழ்ச்சியுறுகின்றோம்.⁾
4⁽ஆண்டவரே!␢ தென்னாட்டின் வறண்ட ஓடையை␢ நீரோடையாக␢ வான்மழை மாற்றுவதுபோல,␢ எங்கள் அடிமை நிலையை␢ மாற்றியருளும்.⁾
5⁽கண்ணீரோடு விதைப்பவர்கள்␢ அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.⁾
6⁽விதை எடுத்துச் செல்லும்போது –␢ செல்லும்போது – அழுகையோடு␢ செல்கின்றார்கள்;␢ அரிகளைச் சுமந்து வரும்போது –␢ வரும்போது – ␢ அக்களிப்போடு வருவார்கள்.⁾
Alleluia
மத்தேயு 5: 16
16இவ்வாறே, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.
Gospel
லூக்கா 8: 16-18
16“எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பர்.
17வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை.
18ஆகையால், நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள். உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்.”