வாசகங்கள்
13 செப்டம்பர், 2027
John Chrysostom, Bishop, Doctor Obligatory Memorial
அன்றைய திருப்பலி
First Reading
1 திமொத்தேயு 2: 1-8
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 28: 2, 7, 8-9
2⁽நான் உம்மிடம் உதவி வேண்டுகையில்,␢ உமது திருத்தூயகத்தை நோக்கி␢ நான் கையுயர்த்தி வேண்டுகையில்,␢ பதில் அளித்தருளும்.⁾
7⁽ஆண்டவர் என் வலிமை, என் கேடயம்;␢ அவரை என் உள்ளம் நம்புகின்றது;␢ நான் உதவி பெற்றேன்; ஆகையால்␢ என் உள்ளம் களிகூர்கின்றது;␢ நான் இன்னிசைபாடி␢ அவருக்கு நன்றி கூறுவேன்.⁾
8⁽ஆண்டவர் தாமே தம் மக்களின் வலிமை;␢ தாம் திருப்பொழிவு செய்தவர்க்கு␢ அவரே பாதுகாப்பான அரண்.⁾
9⁽ஆண்டவரே, உம் மக்களுக்கு␢ விடுதலை அளித்தருளும்;␢ உமது உரிமைச் சொத்தான அவர்களுக்கு␢ ஆசி வழங்கும்;␢ அவர்களுக்கு ஆயராக இருந்து␢ என்றென்றும் அவர்களைத்␢ தாங்கிக்கொள்ளும்.⁾
Alleluia
யோவான் 3: 16
16தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.
Gospel
லூக்கா 7: 1-10
1இயேசு இவற்றை எல்லா மக்களுக்கும் சொல்லி முடித்த பின்பு, கப்பர்நாகுமுக்குச் சென்றார்.
2அங்கே நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர் நோயுற்றுச் சாகும் தறுவாயிலிருந்தார். அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார்.
3அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பித் தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார்.
4அவர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே. அவர் நம் மக்கள் மீது அன்புள்ளவர்;
5எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார்” என்று சொல்லி அவரை ஆர்வமாய் அழைத்தார்கள்.
6இயேசு அவர்களோடு சென்றார். வீட்டுக்குச் சற்றுத் தொலையில் வந்துகொண்டிருந்தபோதே நூற்றுவர் தலைவர் தம் நண்பர்கள் சிலரை அனுப்பிப் பின்வருமாறு கூறச் சொன்னார்; “ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்.
7உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால், ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்.
8நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படை வீரரும் உள்ளனர். நான் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார்; வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்.”
9இவற்றைக் கேட்ட இயேசு அவரைக்குறித்து வியப்புற்றார். தம்மைப் பின்தொடரும் மக்கள்கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து, “இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
10அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அப்பணியாளர் நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்.