வாசகங்கள்
26 செப்டம்பர், 2027
Twenty-Sixth Sunday in Ordinary Time
அன்றைய திருப்பலி
First Reading
எண்ணிக்கை 11: 25-29
25பின்னர், ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து அவரோடு பேசினார்; அவரில் இருந்த ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு அளித்தார்; ஆவி அவர்கள்மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்கு உரைத்தனர்; அதன் பின்னர், அவர்கள் அப்படிச் செய்யவில்லை.
26இரண்டு மனிதர் பாளையத்திலேயே தங்கிவிட்டனர்; ஒருவன் பெயர் எல்தாது, மற்றவன் பெயர் மேதாது. அவர்கள் மீதும் ஆவி இறங்கியது; பதிவு செய்யப்பட்டவர்களில் இவர்களும் உண்டு; ஆனால், அவர்கள் கூடாரத்துக்குச் சென்றிருக்கவில்லை; ஆகவே, அவர்கள் பாளையத்திலேயே இறைவாக்குரைத்தனர்;
27ஓர் இளைஞன் ஓடிவந்து மோசேயிடம், “எல்தாதும் மேதாதும் பாளையத்தில் இறைவாக்குரைக்கின்றனர்” என்று சொன்னான்.
28உடனே தேர்ந்தெடுக்கப்பட்டோரில் ஒருவரும் மோசேயின் ஊழியரும் நூனின் மைந்தருமான யோசுவா, “மோசே! என் தலைவரே! அவர்களைத் தடுத்து நிறுத்தும்” என்றார்.⒫
29ஆனால், மோசே அவரிடம், “என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச்சிறப்பு!” என்றார்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 19: 8, 10, 12-13, 14
8⁽ஆண்டவரின் நியமங்கள் சரியானவை;␢ அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.␢ ஆண்டவரின் கட்டளைகள்␢ ஒளிமயமானவை;␢ அவை கண்களை ஒளிர்விக்கின்றன.⁾
10⁽அவை பொன்னினும்,␢ பசும் பொன்னினும் மேலாக␢ விலைமிக்கவை; தேனினும்,␢ தேனடையினின்று சிந்தும்␢ தெளி தேனினும் இனிமையானவை.⁾
12⁽தம் தவறுகளை␢ உணர்ந்து கொள்பவர் யார்தாம்?␢ என் அறியாப் பிழைக்காக␢ என்னை மன்னியும்.⁾
13⁽மேலும், ஆணவமிக்கோரிடமிருந்து␢ உம் அடியானைக் காத்தருளும்.␢ அவர்கள் என்னை␢ ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்;␢ அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்;␢ பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன்.⁾
14⁽என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே!␢ என் வாயின் சொற்கள்␢ உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்;␢ என் உள்ளத்தின் எண்ணங்கள்␢ உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்.⁾
Second Reading
யாக்கோபு 5: 1-6
1செல்வர்களே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள்.
2உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டுவிட்டன.
3உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சான்றாக இருக்கும்; அது நெருப்புப்போல உங்கள் சதையை அழித்துவிடும். இந்த இறுதி நாள்களில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கின்றீர்களே!
4உங்கள் வயலில் அறுவடை செய்த வேலையாள்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்; அது கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின் கூக்குரல் படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது.
5இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்தீர்கள்.
6நேர்மையானவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துக் கொலை செய்தீர்கள். ஆனால், அவர் உங்களை எதிர்த்து நிற்கவில்லை.
Alleluia
யோவான் 17: 17b, 17a
17உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை.
Gospel
மாற்கு 9: 38-43, 45, 47-48
38அப்பொழுது யோவான் இயேசுவிடம், “போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில், அவர் நம்மைச் சாராதவர்” என்றார்.
39அதற்கு இயேசு கூறியது: “தடுக்க வேண்டாம். ஏனெனில், என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார்.
40ஏனெனில், நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.
41நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”
42“என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.
43உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.
45நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.
47நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது.
48நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.