வாசகங்கள்
14 செப்டம்பர், 2027
Exaltation of the Holy Cross Feast
அன்றைய திருப்பலி
First Reading
எண்ணிக்கை 21: 4b-9
4ஏதோம் நாட்டைச் சுற்றிப்போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து அவர்கள் “செங்கடல் சாலை” வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமையிழந்தனர்.
5மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்; “இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது” என்றனர்.
6உடனே ஆண்டவர் கொள்ளி வாய்ப் பாம்புகளை* மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர்.
7அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் பாவம் செய்துள்ளோம்” நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றி விடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும்” என்றனர். அவ்வாறே, மோசே மக்களுக்காக மன்றாடினார்.
8அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார்.
9அவ்வாறே, மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 78: 1bc-2, 34-35, 36-37, 38
1⁽என் மக்களே,␢ என் அறிவுரைக்குச்␢ செவிசாயுங்கள்;␢ என் வாய்மொழிகளுக்குச்␢ செவிகொடுங்கள்.⁾
2⁽நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்;␢ முற்காலத்து மறைசெய்திகளை␢ எடுத்துரைப்பேன்.⁾
34⁽அவர்களை அவர் கொன்றபோது␢ அவரைத் தேடினர்;␢ மனம் மாறி இறைவனைக்␢ கருத்தாய் நாடினர்.⁾
35⁽கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும்␢ உன்னதரான இறைவன்␢ தங்கள் மீட்பர் என்பதையும்␢ அவர்கள் நினைவில் கொண்டனர்.⁾
36⁽ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே␢ அவரைப் புகழ்ந்தார்கள்;␢ தங்கள் நாவினால் அவரிடம்␢ பொய் சொன்னார்கள்.⁾
37⁽அவர்கள் இதயம்␢ அவரைப் பற்றிக்கொள்வதில்␢ உறுதியாய் இல்லை;␢ அவரது உடன்படிக்கையில்␢ அவர்கள் நிலைத்து நிற்கவில்லை.⁾
38⁽அவரோ இரக்கம் கொண்டவராய்,␢ அவர்கள் குற்றத்தை மன்னித்தார்;␢ அவர்களை அழித்துவிடவில்லை,␢ பலமுறை தம் கோபத்தை␢ அடக்கிக்கொண்டார்.␢ தம் சினத்தையெல்லாம்␢ அவர்களுக்கு எதிராய் மூட்டவில்லை.⁾
Second Reading
பிலிப்பியர் 2: 6-11
6⁽கடவுள் வடிவில் விளங்கிய அவர்,␢ கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை␢ வலிந்து பற்றிக்கொண்டிருக்க␢ வேண்டியதொன்றாகக் கருதவில்லை.⁾
7⁽ஆனால் தம்மையே வெறுமையாக்கி␢ அடிமையின் வடிவை ஏற்று␢ மனிதருக்கு ஒப்பானார்.␢ மனித உருவில் தோன்றி,⁾
8⁽சாவை ஏற்கும் அளவுக்கு,␢ அதுவும் சிலுவைச் சாவையே␢ ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து␢ தம்மையே தாழ்த்திக்கொண்டார்.⁾
9⁽எனவே கடவுளும் அவரை␢ மிகவே உயர்த்தி,␢ எப்பெயருக்கும் மேலான பெயரை␢ அவருக்கு அருளினார்.⁾
10⁽ஆகவே இயேசுவின் பெயருக்கு␢ விண்ணவர், மண்ணவர், கீழுலகோர்␢ அனைவரும் மண்டியிடுவர்;⁾
11⁽தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக␢ ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என␢ எல்லா நாவுமே அறிக்கையிடும்.⁾
Gospel
யோவான் 3: 13-17
13“விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை.
14பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.
15அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.
16தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.
17உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.