செப்டம்பர் 2027

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
2627282930
இன்றுக்கு

வாசகங்கள்

25 செப்டம்பர், 2027

Ordinary Weekday/ Optional Memorial of the Blessed Virgin Mary

Optional Memorial of the Blessed Virgin Mary
First Reading

செக்கரியா 2: 5-9, 14-15a

5ஏனெனில் அதைச் சுற்றிலும் நானே நெருப்புச் சுவராய் அமைவேன்; அதனுள் உறையும் மாட்சியாய் விளங்குவேன்,’ என்கிறார் ஆண்டவர். 6“எழுந்திருங்கள், வடநாட்டிலிருந்து ஓடிவாருங்கள், என்கிறார் ஆண்டவர்; உலகின் நான்கு திசைகளுக்கும் உங்களைச் சிதறடித்தவர் நானே, என்கிறார் ஆண்டவர். 7பாபிலோனில் குடியிருக்கும் சீயோனே! தப்பிப் பிழைத்துக்கொள். 8என்னைத் தமது மாட்சிக்கென்று அனுப்பிய ஆண்டவர் உங்களைக் கொள்ளையடித்த வேற்றினத்தாரைக் குறித்து, ‘உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்’ என்கிறார்.” 9‘இதோ, அவர்களுக்கு எதிராக என் கையை ஓங்கப் போகிறேன்; தங்களுக்குப் பணிவிடை செய்தவர்களுக்கே கொள்ளைப்பொருள் ஆவார்கள்; அப்பொழுது நீங்கள், என்னை அனுப்பியது படைகளின் ஆண்டவர் என்று அறிந்து கொள்வீர்கள்.
Responsorial Psalm

எரேமியா 31: 10, 11-12ab, 13

10⁽மக்களினத்தாரே,␢ ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;␢ தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில்␢ அதை அறிவியுங்கள்;␢ ‘இஸ்ரயேலைச் சிதறடித்தவரே␢ அதைக் கூட்டிச் சேர்ப்பார்;␢ ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல்␢ அதைக் காப்பார்’ என்று சொல்லுங்கள்.⁾ 11⁽ஏனெனில், யாக்கோபை␢ ஆண்டவர் மீட்டார்;␢ அவனிலும் வலியவன் கையினின்று␢ அவனை விடுவித்தார்.⁾ 12⁽அவர்கள் வந்து சீயோனின் உச்சியில்␢ பாடி மகிழ்வார்கள்;␢ தானியம், திராட்சை இரசம்,␢ எண்ணெய், ஆட்டுக்குட்டிகள்,␢ கன்றுகாலிகள், ஆகிய␢ ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப்␢ பூரிப்படைவார்கள்;␢ அவர்களது வாழ்க்கை␢ நீர்வளம் மிக்க␢ தோட்டம் போல் இருக்கும்;␢ அவர்கள் இனிமேல்,␢ ஏங்கித் தவிக்க மாட்டார்கள்.⁾ 13⁽அப்பொழுது கன்னிப்பெண்கள்␢ நடனம் ஆடிக் களித்திருப்பர்;␢ அவ்வாறே இளைஞரும் முதியோரும்␢ மகிழ்ந்திருப்பர்;␢ அவர்களுடைய அழுகையை நான்␢ மகிழ்ச்சியாக மாற்றுவேன்;␢ அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்;␢ துன்பத்திற்குப் பதிலாக␢ இன்பத்தை அருள்வேன்.⁾
Alleluia

2 திமொத்தேயு 1: 10

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

லூக்கா 9: 43b-45

43[a]அப்பொழுது எல்லாரும் கடவுளின் மாண்பைக் கண்டு மலைத்து நின்றார்கள்.⒯[b]இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். அவர் தம் சீடர்களிடம், 44“நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்” என்றார். 45அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.