செப்டம்பர் 2027

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
2627282930
இன்றுக்கு

வாசகங்கள்

18 செப்டம்பர், 2027

Ordinary Weekday/ Optional Memorial of the Blessed Virgin Mary

Optional Memorial of the Blessed Virgin Mary
First Reading

1 திமொத்தேயு 6: 13-16

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 100: 1b-2, 3, 4, 5

1⁽அனைத்துலகோரே!␢ ஆண்டவரை ஆர்ப்பரித்து␢ வாழ்த்துங்கள்!⁾ 2⁽ஆண்டவரை␢ மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!␢ மகிழ்ச்சிநிறை பாடலுடன்␢ அவர் திருமுன் வாருங்கள்!⁾ 3⁽ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!␢ அவரே நம்மைப் படைத்தவர்!␢ நாம் அவர் மக்கள்,␢ அவர் மேய்க்கும் ஆடுகள்!⁾ 4⁽நன்றியோடு அவர்தம்␢ திருவாயில்களில் நுழையுங்கள்!␢ புகழ்ப்பாடலோடு அவர்தம்␢ முற்றத்திற்கு வாருங்கள்!␢ அவருக்கு நன்றி செலுத்தி,␢ அவர் பெயரைப் போற்றுங்கள்!⁾ 5⁽ஏனெனில், ஆண்டவர் நல்லவர்;␢ என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;␢ தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.⁾
Alleluia

லூக்கா 8: 15

15நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.
Gospel

லூக்கா 8: 4-15

4பெரும் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும் அவரிடம் கூடி வந்தபோது அவர் உவமை வாயிலாகக் கூறியது: 5“விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைத்தபோது சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன; வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. 6வேறு சில விதைகள் பாறைமீது விழுந்தன; அவை முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப் போயின. 7மற்றும் சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன; கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கிவிட்டன. 8இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன.” இவ்வாறு சொன்னபின், “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்று உரக்கக் கூறினார். 9இந்த உவமையின் பொருள் என்ன என்று அவருடைய சீடர் அவரிடம் கேட்டனர். 10அதற்கு இயேசு கூறியது: “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. மற்றவர்களுக்கு எல்லாம் உவமைகள் வாயிலாகவே கூறப்படுகின்றன. எனவே, ⁽‘அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் புரிந்துகொள்வதில்லை.’ ”⁾ 11“இந்த உவமையின் பொருள் இதுவே; விதை, இறைவார்த்தை. 12வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது. 13பாறைமீது விழுந்த விதைகள், அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்பவர்களைக் குறிக்கும். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே அவ்வார்த்தையை நம்புவார்கள்; சோதனைக் காலத்தில் நம்பிக்கையை விட்டுவிடுவார்கள். 14முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்டும் கவலை, செல்வம், வாழ்வில் வரும் இன்பங்கள் போன்றவற்றால் நெருக்கப்பட்டு முதிர்ச்சி அடையாதிருப்பவர்களைக் குறிக்கும். 15நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.