வாசகங்கள்
23 செப்டம்பர், 2027
Pio of Pietrelcina, Priest Obligatory Memorial
அன்றைய திருப்பலி
First Reading
ஆகாய் 1: 1-8
1தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஆறாம் மாதம் முதல் நாளன்று இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அது யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமான செருபாபேலுக்கும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவுக்கும் அருளப்பட்ட செய்தி:⒫
2“படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ‛ஆண்டவரது இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்குரிய காலம் இன்னும் வரவில்லை’ என்று இந்த மக்கள் சொல்கிறார்கள்.
3அப்பொழுது இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரது வாக்கு அருளப்பட்டது.
4இந்தக் கோவில் பாழடைந்து கிடக்கும் இந்நேரத்தில், நீங்கள்மட்டும் மாடமாளிகைகளில் குடியிருக்கலாமா?
5ஆதலால், இப்பொழுது படைகளின் ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: ‛உங்களுக்கு நிகழ்ந்திருப்பதை நினைத்துப் பாருங்கள்.
6நீங்கள் விதைத்தது மிகுதி, அறுத்ததோ குறைவு. நீங்கள் உண்கிறீர்கள்; ஆனால் உங்கள் வயிறு நிரம்புவதில்லை. நீங்கள் குடிக்கிறீர்கள்; ஆனால் நீங்கள் நிறைவடைவதில்லை. ஆடை அணிகிறீர்கள்; ஆனால் உங்களுள் எவருக்கும் குளிர் நீங்கவில்லை. வேலையாள் தான் கூலியாக வாங்கிய பணத்தைப் பொத்தலான பையில் போடுகிறான்.⒫
7உங்களுக்கு நேர்ந்துள்ளதை நினைத்துப் பாருங்கள்’ என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர்.⒫
8‛எனவே, மலைக்குச் சென்று மரம் கொண்டு வாருங்கள்; என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்; அது எனக்கு உகந்ததாய் இருக்கும்; அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்’ என்று சொல்கிறார் ஆண்டவர். மிகுதியான அறுவடைக்காகக் காத்திருந்தீர்கள்.⒫
Responsorial Psalm
திருப்பாடல்கள் 149: 1b-2, 3-4, 5-6a and 9b
1⁽அல்லேலூயா!␢ ஆண்டவருக்குப் புதியதொரு § பாடலைப் பாடுங்கள்;␢ அவருடைய அன்பர் சபையில்␢ அவரது புகழைப் பாடுங்கள்.⁾
2⁽இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக்␢ குறித்து மகிழ்ச்சி கொள்வதாக!␢ சீயோனின் மக்கள் தம் அரசரை␢ முன்னிட்டுக் களிகூர்வார்களாக!⁾
3⁽நடனம் செய்து அவரது பெயரைப்␢ போற்றுவார்களாக;␢ மத்தளம் கொட்டி, யாழிசைத்து␢ அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!⁾
4⁽ஆண்டவர் தம் மக்கள் மீது␢ விருப்பம் கொள்கின்றார்;␢ தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு␢ வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார்.⁾
5⁽அவருடைய அன்பர்␢ மேன்மையடைந்து களிகூர்வராக!␢ மெத்தைகளில் சாய்ந்து␢ மகிழ்ந்து கொண்டாடுவராக!⁾
6⁽அவர்களின் வாய்␢ இறைவனை ஏத்திப் புகழட்டும்;␢ அவர்களின் கையில் இருபுறமும்␢ கூர்மையான வாள் இருக்கட்டும்.⁾
9⁽முன்குறித்து வைத்த தீர்ப்பை␢ அவர்களிடம் நிறைவேற்றுவார்கள்;␢ இத்தகைய மேன்மை␢ ஆண்டவர் தம் அன்பர்␢ அனைவருக்கும் உரித்தானது.␢ அல்லேலூயா!⁾
Alleluia
யோவான் 14: 6
6இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே.* என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.⒫
Gospel
லூக்கா 9: 7-9
7நிகழ்ந்தவற்றையெல்லாம் குறுநில மன்னன் ஏரோது கேள்வியுற்று மனம் குழம்பினான். ஏனெனில், சிலர், “இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டார்” என்றனர்.
8வேறு சிலர், “எலியா தோன்றியிருக்கிறார்” என்றனர். மற்றும் சிலர், “முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்” என்றனர்.
9ஏரோது, “யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!” என்று சொல்லி இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.