செப்டம்பர் 2027

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
2627282930
இன்றுக்கு

வாசகங்கள்

19 செப்டம்பர், 2027

Twenty-Fifth Sunday in Ordinary Time

அன்றைய திருப்பலி
First Reading

சாலமோனின் ஞானம் 2: 12, 17-20

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 54: 3-4, 5, 6 and 8

3⁽ஏனெனில், செருக்குற்றோர்␢ எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்;␢ கொடியவர் என் உயிரைப்␢ பறிக்கப் பார்க்கின்றனர்;␢ அவர்கள் கடவுளை␢ அறவே நினைப்பதில்லை. (சேலா)⁾ 4⁽இதோ! கடவுள் எனக்குத்␢ துணைவராய் இருக்கின்றார்;␢ என் தலைவர் என் வாழ்வுக்கு␢ ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்;⁾ 5⁽என் எதிரிகள் எனக்குச் செய்ய விரும்பும்␢ தீமையை அவர்கள் மேலேயே அவர் § திருப்பிவிடுவாராக!␢ ‛உம் வாக்குப் பிறழாமைக்கு ஏற்ப␢ அவர்களை அழித்தொழியும்!⁾ 6⁽தன்னார்வத்தோடு உமக்குப்␢ பலி செலுத்துவேன்;␢ ஆண்டவரே, உமது பெயருக்கு␢ நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று.’⁾
Second Reading

யாக்கோபு 3: 16 - 4: 3

16பேய்த் தன்மை வாய்ந்தது. பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ் செயல்களும் நடக்கும். 17விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு அதன் தூய்மையாகும். மேலும், அது அமைதியை நாடும்; பொறுமை கொள்ளும்; இணங்கிப் போகும் தன்மையுடையது; இரக்கமும் நற்செயல்களும் நிறைந்தது; நடுநிலை தவறாதது; வெளிவேடமற்றது. 18அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது. 1உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமென்ன? உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? 2நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்; போராசை கொள்கிறீர்கள்; அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவு உண்டாக்குகிறீர்கள். அதை நீங்கள் ஏன் பெறமுடிவதில்லை. நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை. 3நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில், நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்; சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறீர்கள்.
Alleluia

2 தெசலோனிக்கர் 2: 14

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

மாற்கு 9: 30-37

30அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். 31ஏனெனில், “மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். 32அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள். 33அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, “வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். 34அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில், தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள். 35அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்றார். 36பிறகு, அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, 37“இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்” என்றார்.