வாசகங்கள்
27 செப்டம்பர், 2027
Vincent De Paul, Priest, Religious Founder Obligatory Memorial
அன்றைய திருப்பலி
First Reading
செக்கரியா 8: 1-8
1படைகளின் ஆண்டவரது வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது: படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
2“சீயோன்மீதுள்ள அன்பு வெறியால் நான் கனன்று கொண்டிருக்கின்றேன்; அதன் மீதுள்ள அன்புவெறியால் நான் சினமுற்றிருக்கின்றேன்.
3“ஆண்டவர் கூறுவது இதுவே: சீயோனுக்கு நான் திரும்பி வரப்போகிறேன்; எருசலேம் நடுவில் குடியிருக்கப் போகிறேன்; எருசலேம் ‘உண்மையுள்ள நகர்’ என்றும், படைகளின் ஆண்டவரது மலை ‘திருமலை’ என்றும் பெயர்பெற்று விளங்கும்.
4படைகளிள் ஆண்டவர் கூறுவது இதுவே: எருசலேமின் தெருக்களில் கிழவரும் கிழவியரும் மீண்டும் அமர்ந்திருப்பார்கள்; வயது முதிர்ந்தவர்களானதால் ஒவ்வொருவரும் தம் கையில் கோல் வைத்திருப்பார்கள்;
5நகரின் தெருக்களில் சிறுவரும் சிறுமியரும் நிறைந்திருப்பார்கள்; அவர்கள் அதன் தெருக்களில் விளையாடிக்கொண்டிருப்பார்கள்.
6படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “இம்மக்களில் எஞ்சியிருப்போரின் கண்களுக்கு இவையெல்லாம் அந்நாள்களில் விந்தையாய்த் தோன்றினாலும், என் கண்களுக்கு விந்தையாய்த் தோன்றுமோ?” என்கிறார் படைகளின் ஆண்டவர்.
7படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “இதோ, கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் என் மக்களை விடுவிப்பேன்;
8அவர்களை அழைத்துக் கொண்டு வருவேன்; அவர்கள் எருசலேமில் குடியிருப்பார்கள்; அவர்கள் என் மக்களாயிருப்பார்கள்; உண்மையிலும் நீதியிலும் நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்.”
Responsorial Psalm
திருப்பாடல்கள் 102: 16-18, 19-21, 29 and 22-23
16⁽ஏனெனில் ஆண்டவர்␢ சீயோனைக் கட்டியெழுப்புவார்;␢ அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்.⁾
17⁽திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு␢ அவர் செவிகொடுப்பார்;␢ அவர்களின் மன்றாட்டை அவமதியார்.⁾
18⁽இனி வரவிருக்கும் தலைமுறைக்கென␢ இது எழுதி வைக்கப்படட்டும்;␢ படைக்கப்படவிருக்கும் மக்கள்␢ ஆண்டவரைப் புகழட்டும்.⁾
19⁽ஆண்டவர் தம் மேலுலகத்␢ திருத்தலத்தினின்று␢ கீழே நோக்கினார்;␢ அவர் விண்ணுலகினின்று␢ வையகத்தைக் கண்ணோக்கினார்.⁾
20⁽அவர் சிறைப்பட்டோரின்␢ புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்;␢ சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை␢ விடுவிப்பார்.⁾
21⁽சீயோனில் ஆண்டவரின் பெயர்␢ போற்றப்படும்.␢ எருசலேமில் அவர்தம் புகழ்␢ அறிவிக்கப்படும்.⁾
22⁽அப்போது, மக்களினங்களும்␢ அரசுகளும் ஒன்றுதிரண்டு␢ ஆண்டவரை வழிபடுவர்.⁾
23⁽என் வாழ்க்கைப் பாதையின் நடுவில்␢ ஆண்டவர் என் வலிமையைக்␢ குன்றச் செய்தார்; அவர்␢ என் ஆயுளைக் குறுக்கிவிட்டார்.⁾
Alleluia
மாற்கு 10: 45
45ஏனெனில், மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய* மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.
Gospel
லூக்கா 9: 46-50
46தங்களுக்குள் பெரியவர் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது.
47இயேசு அவர்களின் எண்ணங்களை அறிந்து ஒரு சிறு பிள்ளையை எடுத்து, தம் அருகே நிறுத்தி,
48அவர்களிடம், “இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார். உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்” என்றார்.
49யோவான் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, ஒருவர் உமது பெயரால் பேய் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப்பார்த்தோம்; ஏனெனில், அவர் நம்மைச் சாராதவர்” என்றார்.
50இயேசு அவரை நோக்கி, “தடுக்க வேண்டாம்; ஏனெனில், நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்” என்றார்.