நவம்பர் 2027

ஞா தி செ பு வி வெ
123456
78910111213
14151617181920
21222324252627
282930
இன்றுக்கு

வாசகங்கள்

2 நவம்பர், 2027

The Commemoration of All the Faithful Departed (all Souls)

அன்றைய திருப்பலி
First Reading

சாலமோனின் ஞானம் 3: 1-9

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 23: 1-3a, 3b-4, 5, 6

1⁽ஆண்டவரே என் ஆயர்;␢ எனக்கேதும் குறையில்லை.⁾ 2⁽பசும்புல் வெளிமீது எனை அவர்␢ இளைப்பாறச் செய்வார்;␢ அமைதியான நீர்நிலைகளுக்கு␢ எனை அழைத்துச் செல்வார்.⁾ 3⁽அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்;␢ தம் பெயர்க்கேற்ப␢ எனை நீதிவழி நடத்திடுவார்;⁾ 4⁽மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில்␢ நான் நடக்க நேர்ந்தாலும்,␢ நீர் என்னோடு இருப்பதால்␢ எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;␢ உம் கோலும் நெடுங்கழியும்␢ என்னைத் தேற்றும்.⁾ 5⁽என்னுடைய எதிரிகளின் கண் முன்னே␢ எனக்கொரு விருந்தினை␢ ஏற்பாடு செய்கின்றீர்;␢ என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்;␢ எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.⁾ 6⁽உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம்␢ உம் அருள் நலமும் பேரன்பும்␢ என்னைப் புடைசூழ்ந்து வரும்;␢ நானும் ஆண்டவரின் இல்லத்தில் § நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.⁾
Second Reading

உரோமையர் 5: 5-11 or உரோமையர் 6: 3-9

5அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; எனெனில், நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.⒫ 6நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்தகாலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். 7நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். 8ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார். 9ஆகையால், இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி, அவர் வழியாய் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப்பெறுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ? 10நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ! 11அது மட்டும் அல்ல, இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவுகொண்டு பெருமகிழ்ச்சியடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே.
Alleluia

மத்தேயு 25: 34

34பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Gospel

யோவான் 6: 37-40

37தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன். 38ஏனெனில், என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்.⒫ 39“அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம். 40மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்” என்று கூறினார்.⒫