நவம்பர் 2027

ஞா தி செ பு வி வெ
123456
78910111213
14151617181920
21222324252627
282930
இன்றுக்கு

வாசகங்கள்

20 நவம்பர், 2027

Ordinary Weekday/ Optional Memorial of the Blessed Virgin Mary

Optional Memorial of the Blessed Virgin Mary
First Reading

1 மக்கபேயர் 6: 1-13

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 9: 2-3, 4 and 6, 16 and 19

2⁽உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களிகூர்வேன்;␢ உன்னதரே, உமது பெயரைப்␢ போற்றிப் பாடுவேன்.⁾ 3⁽என் எதிரிகள் பின்னிட்டுத் திரும்புவார்கள்;␢ உமது முன்னிலையில்␢ இடறிவிழுந்து அழிவார்கள்.⁾ 4⁽நீர் நீதியுள்ள நடுவராய்␢ அரியணையில் வீற்றிருக்கின்றீர்;␢ என் வழக்கில் எனக்கு நீதி வழங்கினீர்.⁾ 6⁽எதிரிகள் ஒழிந்தார்கள்; என்றும்␢ தலையெடுக்கமுடியாமல் அழிந்தார்கள்.⁾ 16⁽ஆண்டவர் நீதியை நிலைநாட்டுவதன் மூலம்␢ தம்மை வெளிப்படுத்தியுள்ளார்;␢ பொல்லார் செய்த செயலில்␢ அவர்களே சிக்கிக்கொண்டனர். (இடை இசை: சேலா)⁾ 19⁽ஆண்டவரே, எழுந்தருளும்;␢ மனிதரின் கை ஓங்க விடாதேயும்;␢ வேற்றினத்தார் உமது முன்னிலையில்␢ தீர்ப்புப் பெறுவார்களாக!⁾
Alleluia

2 திமொத்தேயு 1: 10

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

லூக்கா 20: 27-40

27உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, 28“போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார். 29இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். 30இரண்டாம், 31மூன்றாம், சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; 32கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். 33அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில், எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?” என்று கேட்டனர். 34அதற்கு இயேசு அவர்களிடம், “இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்துகொள்கின்றனர். 35ஆனால், வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை. 36இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே. 37இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, ⁽‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்’⁾ என்று கூறியிருக்கிறார். 38அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில், அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே” என்றார். 39மறைநூல் அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து, “போதகரே, நன்றாகச் சொன்னீர்” என்றனர். 40அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.