வாசகங்கள்
5 நவம்பர், 2027
Ordinary Weekday
அன்றைய திருப்பலி
First Reading
உரோமையர் 15: 14-21
14என் சகோதர சகோதரிகளே, நீங்கள் நன்னயம் நிறைந்தவர்களாயும், எல்லா அறிவும் நிரம்பப் பெற்றவர்களாயும், ஒருவர் மற்றவரை அறிவுறுத்தக் கூடியவர்களாயும் இருக்கிறீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.
15ஆயினும், உங்களுக்கு நினைவூட்டும் வகையில் சிலவற்றை இக்கடிதத்தில் மிகத் துணிவோடு எழுதியுள்ளேன். நான் கடவுளின் அருளைப் பெற்றவன் என்பதால் தான் அவ்வாறு எழுதினேன்.
16அந்த அருள்தான் என்னைப் பிற இனத்தாருக்குப் பணிசெய்யக் கிறிஸ்து இயேசுவின் ஊழியனாக்கிற்று. பிற இனத்தார் தூய ஆவியால் அர்ப்பணிக்கப்பட்ட, கடவுளுக்கு உகந்த காணிக்கையாகும்படி அவர்களுக்கு கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே என் குருத்துவப் பணி.
17ஆகையால், கடவுளுக்காகச் செய்யும் இந்தப் பணியை முன்னிட்டு, கிறிஸ்து இயேசுவுக்குரியவனாகிய நான் பெருமை பாராட்டிக் கொள்ள இடமுண்டு.
18பிற இனத்தார் தமக்குக் கீழ்ப்படியும் பொருட்டுக் கிறிஸ்து என் வழியாய்ச் சொல்லாலும் செயலாலும், அரும் அடையாளங்கள், அருஞ் செயல்களின் வல்லமையாலும், கடவுளின் ஆவியின் வல்லமையாலும் செய்து முடித்தவற்றைத் தவிர வேறெதைப் பற்றியும் பேச நான் துணியமாட்டேன்.
19இவ்வாறு, எருசலேம் தொடங்கி இல்லிரிக்கம் மாநிலம் வரை எங்கும் சுற்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் பணியை முடித்துவிட்டேன்.
20கிறிஸ்துவின் பெயரைக் கேள்விப்படாத இடங்களில் மட்டும் நற்செய்தி அறிவிப்பதே என நோக்கமாய் இருந்தது. ஏனெனில், வேறொருவர் இட்ட அடித்தளத்தின்மேல் கட்டி எழுப்ப நான் விரும்பவில்லை.
21ஆனால், ⁽“தங்களுக்குச் சொல்லப்படாததை␢ அவர்கள் காண்பர்;␢ தாங்கள் கேள்விப்படாததை␢ அவர்கள் புரிந்துகொள்வர்”⁾ என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா!
Responsorial Psalm
திருப்பாடல்கள் 98: 1, 2-3ab, 3cd-4
1⁽ஆண்டவருக்குப் புதியதொரு␢ பாடல் பாடுங்கள்;␢ ஏனெனில், அவர் வியத்தகு␢ செயல்கள் புரிந்துள்ளார்.␢ அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும்␢ அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.⁾
2⁽ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்;␢ பிற இனத்தார் கண்முன்னே␢ தம் நீதியை வெளிப்படுத்தினார்.⁾
3⁽இஸ்ரயேல் வீட்டாருக்கு␢ வாக்களிக்கப்பட்ட␢ தமது பேரன்பையும் உறுதிமொழியையும்␢ அவர் நினைவுகூர்ந்தார்.␢ உலகெங்குமுள அனைவரும்␢ நம் கடவுள் அருளிய␢ விடுதலையைக் கண்டனர்.⁾
4⁽உலகெங்கும் வாழ்வோரே!␢ அனைவரும் ஆண்டவரை␢ ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!␢ மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப்␢ புகழ்ந்தேத்துங்கள்.⁾
Alleluia
1 யோவான் 2: 5
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Gospel
லூக்கா 16: 1-8
1இயேசு தம் சீடருக்குக் கூறியது: “செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது.
2தலைவர் அவரைக் கூப்பிட்டு, ‘உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது’ என்று அவரிடம் கூறினார்.
3அந்த வீட்டுப் பொறுப்பாளர், ‘நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது.
4வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும்’ என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.
5பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ‘நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார்.
6அதற்கு அவர், ‘நூறு குடம் எண்ணெய்’ என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ‘இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்’ என்றார்.
7பின்பு அடுத்தவரிடம், ‘நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு மூடை* கோதுமை’ என்றார். அவர், ‘இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்’ என்றார்.
8நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.⒫