வாசகங்கள்
12 நவம்பர், 2027
Josaphat, Bishop, Religious, Martyr Obligatory Memorial
அன்றைய திருப்பலி
First Reading
சாலமோனின் ஞானம் 13: 1-9
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 19: 2-3, 4-5ab
2⁽ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு␢ அச்செய்தியை அறிவிக்கின்றது;␢ ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு␢ அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது.⁾
3⁽அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை;␢ அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.⁾
4⁽ஆயினும், அவற்றின் அறிக்கை␢ உலகெங்கும் சென்றடைகின்றது; § அவை கூறும் செய்தி␢ உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது,␢ இறைவன் அங்கே கதிரவனுக்கு␢ ஒரு கூடாரம் அமைத்துள்ளார்.⁾
5⁽மணவறையிலிருந்து புறப்படும்␢ மணமகளைப் போல அது வருகின்றது;␢ பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல மகிழ்வோடு␢ அது தன் பாதையில் ஓடுகின்றது.⁾
Alleluia
லூக்கா 21: 28
28இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில், உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.”
Gospel
லூக்கா 17: 26-37
26நோவாவின் காலத்தில் நடந்ததுபோலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும்.
27நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தது.
28அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள், குடித்தார்கள்; வாங்கினார்கள், விற்றார்கள்; நட்டார்கள், கட்டினார்கள்.
29லோத்து சோதோமை விட்டுப்போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன.
30மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.⒫
31“அந்நாளில் வீட்டின் மேல் தளத்தில் இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக் கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம்.
32லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.
33தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக் கொள்வர்.⒫
34நான் உங்களுக்குச் சொல்கிறேன்; அந்த இரவில் ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார்.
35இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.
36[இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார்.]*
37அவர்கள் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, இது எங்கே நிகழும்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “பிணம் எங்கே இருக்கிறதோ அங்கேயே கழுகுகளும் வந்து கூடும்” என்றார்.