வாசகங்கள்
4 நவம்பர், 2027
Charles Borromeo, Bishop Obligatory Memorial
அன்றைய திருப்பலி
First Reading
உரோமையர் 14: 7-12
7நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை; தமக்கென்று இறப்பதுமில்லை.
8வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம்.
9ஏனெனில், இறந்தோர்மீதும் வாழ்வோர்மீதும் ஆட்சிசெலுத்தவே கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார்.
10அப்படியிருக்க, நீங்கள் ஏன் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் குற்றம் காண்கிறீர்கள்? ஏன் அவர்களை இழிவாகக் கருதுகிறீர்கள்? நாம் அனைவருமே கடவுளின் நடுவர் இருக்கை முன் நிறுத்தப்படுவோம் அல்லவா?
11ஏனெனில், ⁽ “ஆண்டவர் சொல்கிறார்;␢ நான் என் மேல் ஆணையிட்டுள்ளேன்;␢ முழங்கால் அனைத்தும்␢ எனக்கு முன் மண்டியிடும்.␢ நாவு அனைத்தும் என்னைப் போற்றும்”⁾ என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!
12ஆகவே, நம்முள் ஒவ்வொருவரும் தம்மைக் குறித்தே கடவுளுக்குக் கணக்குக் கொடுப்பர்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 27: 1bcde, 4, 13-14
1⁽ஆண்டவரே என் ஒளி;␢ அவரே என் மீட்பு;␢ யாருக்கு நான் அஞ்சவேண்டும்?␢ ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்;␢ யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?⁾
4⁽நான் ஆண்டவரிடம்␢ ஒரு விண்ணப்பம் செய்தேன்;␢ அதையே நான் நாடித் தேடுவேன்;␢ ஆண்டவரின் இல்லத்தில்␢ என் வாழ்நாள் எல்லாம்␢ நான் குடியிருக்க வேண்டும்,␢ ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; § அவரது கோவிலில் அவரது␢ திருவுளத்தைக் கண்டறிய வேண்டும்.⁾
13⁽வாழ்வோரின் நாட்டினிலே␢ ஆண்டவரின் நலன்களைக்␢ காண்பேன் என்று␢ நான் இன்னும் நம்புகின்றேன்.⁾
14⁽நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு;␢ மன உறுதிகொள்;␢ உன் உள்ளம் வலிமை பெறட்டும்;␢ ஆண்டவருக்காகக் காத்திரு.⁾
Alleluia
மத்தேயு 11: 28
28மேலும் அவர், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
Gospel
லூக்கா 15: 1-10
1வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.
2பரிசேயரும், மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர்.
3அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:
4“உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா?
5கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்;
6வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில், காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்’ என்பார்.
7அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
8“பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள்* ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா?
9கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள், ஏனெனில், காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார்.
10அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.”