நவம்பர் 2027

ஞா தி செ பு வி வெ
123456
78910111213
14151617181920
21222324252627
282930
இன்றுக்கு

வாசகங்கள்

11 நவம்பர், 2027

Martin of Tours, Bishop Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

சாலமோனின் ஞானம் 7: 22b - 8: 1

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 119: 89, 90, 91, 130, 135, 175

89⁽ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது␢ உமது வாக்கு;␢ விண்ணுலகைப்போல்␢ அது நிலைத்துள்ளது.⁾ 90⁽தலைமுறை தலைமுறையாய் உள்ளது␢ உமது வாக்குப் பிறழாமை;␢ நீர் பூவுலகை உறுதியாய் இருக்கச் செய்தீர்,␢ அது நிலைபெற்றுள்ளது.⁾ 91⁽உம் ஒழுங்குமுறைகளின்படியே␢ அனைத்தும் இன்றுவரை␢ நிலைத்துள்ளன.␢ ஏனெனில், அவை␢ உமக்கு ஊழியம் செய்கின்றன.⁾ 130⁽உம் சொற்களைப்பற்றிய விளக்கம்␢ ஒளி தருகின்றது;␢ அது பேதைகளுக்கு␢ நுண்ணறிவு ஊட்டுகிறது.⁾ 135⁽உம் ஊழியன்மீது உமது முகஒளி␢ வீசச் செய்யும்!␢ உம் விதிமுறைகளை எனக்குக்␢ கற்பித்தருளும்.⁾ 175⁽உயிர் பிழைத்து நான் ␢ உம்மைப் புகழ்வேனாக!␢ உம் நீதி நெறிகள் எனக்குத்␢ துணைபுரிவனவாக!⁾
Alleluia

யோவான் 15: 5

5நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.
Gospel

லூக்கா 17: 20-25

20இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர். அவர் மறுமொழியாக, “இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது. 21இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்லமுடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது” என்றார். 22பின்பு, அவர் சீடர்களை நோக்கிக் கூறியது: “ஒரு காலம் வரும்; அப்போது மானிட மகனுடைய நாள்களில் ஒன்றையாவது காண நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். ஆனால், நீங்கள் காணமாட்டீர்கள். 23அவர்கள் உங்களிடம், ‘இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே!’ என்பார்கள். ஆனால், நீங்கள் போக வேண்டாம்; அவர்களைப் பின் தொடரவும் வேண்டாம். 24வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரைக்கும் பளீரென மின்னி ஒளிர்வது போல மானிடமகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார். 25ஆனால், முதலில் அவர் பல துன்பங்கள் பட்டு இந்தத் தலைமுறையினரால் உதறித் தள்ளப்பட வேண்டும்.