வாசகங்கள்
25 நவம்பர், 2027
Ordinary Weekday/ Catherine of Alexandria, Virgin, Martyr/ Thanksgiving Day / Ordinary
Ordinary
First Reading
தானியேல் 6: 12-28
12உடனே அவர்கள் அரசனை அணுகி, அவனது தடையுத்தரவைப் பற்றிக் குறிப்பிட்டு, “அரசரே! முப்பது நாள்வரையில் அரசராகிய உம்மிடமன்றி வேறெந்தத் தெய்வத்திடமோ மனிதனிடமோ யாதொரு விண்ணப்பமும் செய்கின்ற எந்த மனிதனும் சிங்கக் குகையில் தள்ளப்படுவான் என்ற தடையுத்தரவில் கையொப்பமிட்டுள்ளீர் அல்லவா?” என்றார்கள். அதற்கு அரசன், “ஆம், மேதியர், பாரசீகரின் சட்டங்கள் மாறாதிருப்பதுபோல், இதுவும் மாறாததே” என்றான்.
13உடனே அவர்கள் அரசனை நோக்கி, “யூதாவிலிருந்து சிறைப்பிடித்துக் கொண்டு வரப்பட்டவர்களுள் ஒருவனாகிய தானியேல் உம்மை மதியாமல், நீர் கையொப்பமிட்டுள்ள தடையுத்தரவை மீறி நாள்தோறும் மூன்று வேளையும் வேண்டுதல் செய்கிறான்” என்றார்கள்.⒫
14ஆனால், அரசன் இந்தச் சொற்களைக் கேட்டு மிகவும் மனம் வருந்தினான்; தானியேலைக் காப்பாற்றத் தனக்குள் உறுதி பூண்டவனாய், அன்று கதிரவன் மறையும் வரையில் அவரைக் காப்பாற்ற வழி தேடினான்.
15ஆனால் அந்த மனிதர்கள் முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அரசனிடம் வந்து, அவனை நோக்கி, “அரசரே! மேதியர், பாரசீகரின் சட்டப்படி, அரசன் விடுத்த தடையுத்தரவோ சட்டமோ மாற்றத்திற்கு அப்பாற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளும்” என்றனர்.⒫
16ஆகவே, அரசனுடைய கட்டளைப்படி தானியேல் கொண்டுவரப்பட்டுச் சிங்கக் குகையில் தள்ளப்பட்டார். அப்பொழுது அரசன் தானியேலை நோக்கி, “நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுள் உன்னை விடுவிப்பாராக!” என்றான்.
17அவர்கள் ஒரு பெரிய கல்லைப் புரட்டிக் கொண்டுவந்து குகையின் வாயிலை அடைத்தார்கள்; தானியேலுக்குச் செய்யப்பட்டதில் யாதொன்றும் மாற்றப்படாதிருக்கும்படி அரசன் தன் மோதிரத்தாலும் தம் உயர்குடி மக்களின் மோதிரங்களாலும் அதற்கு முத்தரையிட்டான்.
18பின்னர் அரசன் அரண்மனைக்குத் திரும்பிச்சென்று, அன்றிரவு முழுவதும் உணவு கொள்ளவில்லை; வேறு எந்தக் களியாட்டத்திலும் ஈடுபடவில்லை. உறக்கமும் அவனை விட்டகன்றது.⒫
19பொழுது புலர்ந்தவுடன், அவன் எழுந்து சிங்கக் குகைக்கு விரைந்து சென்றான்.
20தானியேல் இருந்த குகையருகில் வந்தவுடன் துயரக்குரலில் அவன் தானியேலை நோக்கி, “தானியேல்! என்றுமுள கடவுளின் ஊழியனே! நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுளால் உன்னைச் சிங்கங்களினின்று விடுவிக்க முடிந்ததா?’ என்று உரக்கக் கேட்டான்.
21அதற்குத் தானியேல் அரசனிடம், “அரசரே! நீர் நீடூழி வாழ்க!
22என் கடவுள் தம் தூதரை அனுப்பிச் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப்போட்டார். அவை எனக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லை; ஏனெனில் அவர் திருமுன் நான் மாசற்றவன். மேலும் அரசரே! உம் முன்னிலையிலும் நான் குற்றமற்றவனே! என்று மறுமொழி கொடுத்தார்.
23எனவே, அரசன் மிகவும் மனம் மகிழ்ந்து, உடனே தானியேலைக் குகையிலிருந்து விடுவிக்குமாறு கட்டளையிட்டான். அவ்வாறே தானியேலைக் குகையிலிருந்து வெளியே தூக்கினார்கள். அவருக்கு யாதொரு தீங்கும் நேரிடவில்லை; ஏனெனில் அவர் தம் கடவுளை உறுதியாக நம்பினார்.
24பிறகு அரசனது கட்டளைக்கிணங்க, தானியேலைக் குற்றம் சாட்டியவர்கள் இழுத்துக் கொண்டுவரப்பட்டனர். அவர்களும் அவர்களுடைய மனைவி, மக்களும் சிங்கக் குகையினுள் தள்ளப்பட்டார்கள். அவர்கள் குகையின் அடித்தளத்தை அடையும் முன்னே சிங்கங்கள் அவர்களைக் கவ்விப் பிடித்து, அவர்களுடைய எலும்புகளை எல்லாம் நொறுக்கிவிட்டன.⒫
25அப்பொழுது தாரியு அரசன் நாடெங்கும் வாழ்ந்துவந்த எல்லா இனத்தவர்க்கும் நாட்டினர்க்கும் மொழியினர்க்கும் ஓர் அறிக்கை விடுத்தான்.
26“உங்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டாவதாக! என் ஆட்சிக்குட்பட்ட நாடு முழுவதும் உள்ள மக்கள் தானியேலின் கடவுளுக்கு அஞ்சி நடுங்க வேண்டும். இது என் ஆணை.⁽ஏனெனில், அவரே வாழும் கடவுள்;␢ அவர் என்றென்றும்␢ நிலைத்திருக்கின்றார்;§ அவரது ஆட்சி என்றும் அழிவற்றது;␢ அவரது அரசுரிமைக்கு முடிவே இராது.⁾
27⁽தானியேலைச் சிங்கங்களின்␢ பிடியினின்று காப்பாற்றியவர் அவரே;␢ அவரே மீட்பவர்!␢ விடுதலை அளிப்ப வரும் அவரே!␢ விண்ணிலும் மண்ணிலும்␢ அரிய செயல்களையும்␢ விந்தைகளையும் ஆற்றுபவர் அவரே!”⁾⒫
28இவ்வாறு, தானியேல் தாரியுவின் ஆட்சிக் காலத்திலும், பாரசீகனான சைரசு மன்னனின் ஆட்சிக் காலத்திலும் சீரும் சிறப்புமாய் இருந்தார்.
Responsorial Psalm
தானியேல் 3: 68, 69, 70, 71, 72, 73, 74
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Alleluia
லூக்கா 21: 28
28இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில், உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.”
Gospel
லூக்கா 21: 20-28
20“எருசலேமைப் படைகள் சூழ்ந்திருப்பதை நீங்கள் காணும்போது அதன் அழிவு நெருங்கி வந்துவிட்டது என அறிந்துகொள்ளுங்கள்.
21அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்; நகரத்தின் நடுவில் உள்ளவர்கள் வெளியேறட்டும்; நாட்டுப் புறங்களில் இருப்பவர்கள் நகரத்துக்குள்ளே வரவேண்டாம்.
22ஏனெனில், அவை பழிவாங்கும் நாள்கள். அப்போது மறைநூலில் எழுதியுள்ள யாவும் நிறைவேறும்.
23அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்! ஏனெனில், மண்ணுலகின்மீது பேரிடரும் அம்மக்கள் மீது கடவுளின் சினமும் வரும்.
24அவர்கள் கூரான வாளால் வீழ்த்தப்படுவார்கள்; எல்லா நாடுகளுக்கும் சிறைப்பிடித்துச் செல்லப்படுவார்கள்; பிற இனத்தார் காலம் நிறைவு பெறும் வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும்.
25“மேலும் கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள்.
26உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும்.
27அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள்.
28இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில், உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.”
Proper
First Reading
சீராக் 50: 22-24
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 145: 2-3, 4-5, 6-7, 8-9, 10-11
2⁽நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்;␢ உமது பெயரை என்றும்␢ எப்பொழுதும் புகழ்வேன்.⁾
3⁽ஆண்டவர் மாண்புமிக்கவர்;␢ பெரிதும் போற்றுதலுக்கும் உரியவர்;␢ அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது.⁾
4⁽ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு␢ உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்;␢ வல்லமைமிகு உம் செயல்களை␢ எடுத்துரைக்கும்.⁾
5⁽உமது மாண்பின்␢ மேன்மையையும் மாட்சியையும்␢ வியத்தகு உம் செயல்களையும்␢ நான் சிந்திப்பேன்.⁾
6⁽அச்சந்தரும் உம் செயல்களின்␢ வல்லமையைப்பற்றி␢ மக்கள் பேசுவார்கள்;␢ உமது மாண்பினை நான்␢ விரித்துரைப்பேன்,⁾
7⁽அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை␢ நினைந்துக் கொண்டாடுவார்கள்;␢ உமது நீதியை எண்ணி␢ ஆர்ப்பரித்துப் பாடுவார்கள்.⁾
8⁽ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்;␢ எளிதில் சினம் கொள்ளாதவர்;␢ பேரன்பு கொண்டவர்.⁾
9⁽ஆண்டவர் எல்லாருக்கும்␢ நன்மை செய்பவர்;␢ தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும்␢ இரக்கம் காட்டுபவர்.⁾
10⁽ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும்␢ உமக்கு நன்றி செலுத்தும்;␢ உம்முடைய அன்பர்கள்␢ உம்மைப் போற்றுவார்கள்.⁾
11⁽அவர்கள் உமது அரசின் மாட்சியை␢ அறிவிப்பார்கள்;␢ உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.⁾
Second Reading
1 கொரிந்தியர் 1: 3-9
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Alleluia
1 தெசலோனிக்கர் 5: 18
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Gospel
லூக்கா 17: 11-19
11இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்.
12ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே,
13“ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.
14அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று.
15அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்;
16அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.
17இயேசு, அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?
18கடவுளைப் போற்றிப் புகழ அந்நியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.
19பின்பு அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார்.