நவம்பர் 2027

ஞா தி செ பு வி வெ
123456
78910111213
14151617181920
21222324252627
282930
இன்றுக்கு

வாசகங்கள்

21 நவம்பர், 2027

Christ the King Solemnity (Thirty-Fourth and last Sunday in Ordinary Time)

அன்றைய திருப்பலி
First Reading

தானியேல் 7: 13-14

13⁽இரவில் நான் கண்ட காட்சியாவது:␢ வானத்தின் மேகங்களின் மீது␢ மானிட மகனைப் போன்ற␢ ஒருவர் தோன்றினார்;␢ இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில்␢ அவர் வந்தார்;␢ அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார்.⁾ 14⁽ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும்␢ அவருக்கு கொடுக்கப்பட்டன;␢ எல்லா இனத்தாரும்␢ நாட்டினரும் மொழியினரும்␢ அவரை வழிபட வேண்டும்;␢ அவரது ஆட்சியுரிமை␢ என்றுமுளதாகும்;␢ அதற்கு முடிவே இராது;␢ அவரது அரசு அழிந்து போகாது.⁾⒫
Responsorial Psalm

திருப்பாடல்கள் 93: 1abc, 1d-2, 5

1⁽ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;␢ அவர் மாட்சியை ஆடையாய்␢ அணிந்துள்ளார்;␢ ஆண்டவர் வல்லமையைக்␢ கச்சையாகக் கொண்டுள்ளார்; § பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்;␢ அது அசைவுறாது.⁾ 2⁽உமது அரியணை தொடக்கத்திலிருந்தே␢ நிலைபெற்றள்ளது;␢ நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர்.⁾ 5⁽உம்முடைய ஒழுங்குமுறைகள்␢ மிகவும் உறுதியானவை;␢ ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே␢ உமது இல்லத்தை அழகு செய்யும்.⁾
Second Reading

திருவெளிப்பாடு 1: 5-8

5Same as above 6ஆட்சி உரிமை பெற்றவர்களாக, அதாவது நம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக நம்மை ஏற்படுத்தினார். இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. ஆமென். 7⁽இதோ! அவர்␢ மேகங்கள் சூழ வருகின்றார்.␢ அனைவரும் அவரைக் காண்பர்;␢ அவரை ஊடுருவக்␢ குத்தியோரும் காண்பர்;␢ அவர்பொருட்டு␢ மண்ணுலகின் குலத்தார் அனைவரும்␢ மாரடித்துப் புலம்புவர்.␢ இது உண்மை, ஆமென்!⁾⒫ 8“அகரமும் னகரமும் நானே”* என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே.
Alleluia

மாற்கு 11: 9, 10

9முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், ⁽“ஓசன்னா!* ஆண்டவர் பெயரால்␢ வருகிறவர் போற்றப்பெறுக!⁾ 10⁽வரவிருக்கும் நம் தந்தை␢ தாவீதின் அரசு போற்றப்பெறுக!␢ உன்னதத்தில் ஓசன்னா!”⁾ என்று ஆர்ப்பரித்தனர்.⒫
Gospel

யோவான் 18: 33b-37

33பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான். 34இயேசு மறுமொழியாக, “நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?” என்று கேட்டார். 35அதற்கு பிலாத்து, “நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?” என்று கேட்டான். 36இயேசு மறுமொழியாக, “எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால், என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல” என்றார். 37பிலாத்து அவரிடம், “அப்படியானால் நீ அரசன்தானோ?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்” என்றார்.